சாலிட்டியூடு கோட்டையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாலிட்டியூடு கோட்டையகம்
Schloss Solitude
Solitude pan-pjt.jpg
சாலிட்டியூடு கோட்டையகம்
பொதுவான தகவல்கள்
நகர்இசுடுட்கார்ட்டு
நாடுசெர்மனி

சாலிட்டியூடு கோட்டையகம் என்பது இசுடுட்கார்ட்டுப் பகுதியில் வுயர்ட்டம்பெர்கினைச் சேர்ந்த கார்ல் ஆய்கன் என்னும் பிரபுவால் கட்டப்பட்ட ஒரு வேட்டையாடுவதற்காகத் தங்குமிடம். இது 1764 - 1769 காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது இசுடுட்கார்ட்டு, லியோன்பெர்கு, கெர்லிங்கென் பகுதிகளுக்கிடையே மலையின் மீதுள்ள சமவெளிப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து லுட்விக்சுபெர்கில் உள்ள பிரபுவின் மாளிகைக்கு மிகவும் நேராகச் செல்லும் சாலை அமைக்கப்பட்டிருந்தது. இச்சாலையின் பெரும்பகுதி இன்றும் திசை மாற்றப்படாமல் பயன்பாட்டில் உள்ளது.