சாலிக் (சாலை சுங்கவரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல் கர்ஹூத் பாலத்தின் சுங்கச்சாவடி
வாகனத்தின் கண்ணாடியில் சாலிக் அட்டை
படிமம்:Salik Toll Gate.jpg
சாலிக் சுங்கச்சவடி
துபாய் போக்குவரத்துத் துறையின் பேருந்தில் சாலிக் விளம்பரம்

சாலிக் (Salik (road toll)) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாயில் உள்ள மின்னணு கட்டண சாலை முறைக்கு வழங்கப்பட்ட பெயராகும். [1]

செயல்படும் முறை[தொகு]

இது வானலை அடையாளம் (RFID) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சுங்க சாவடியின் கீழ் செல்லும்போது ஏற்கனவே இணைத்து வைத்திருக்கும் கணக்கில் இருந்து கட்டணம் தானாகவே கழிக்கப்பட்டு விடும். 2007 சூலை 1 அன்று துபாயின், துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இந்தக்க் கட்டண முறையை அறிமுகப்படுத்தியது. வாகனங்களை பரிவர்த்தனைகளுக்காக சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் நேரம் வீணாகாமல் தொடர்ந்து ஓட்டவும் இம்முறை உதவுகிறது.

இந்த வேகச்சீட்டுகளை அதிகாரப்பூர்வ வழங்குநர்களிடமிருந்தோ அல்லது வங்கிகளில் கணக்கு எண்ணில் பணம் செலுத்துவதன் மூலமோ அல்லது எண்ணெய் நிறுவனங்களின் விற்பனைமையங்களிலிருந்தும் வாங்கலாம்

 • வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்ட மின் அட்டையின் மூலம் இது செயல்படுகின்றது. ஒவ்வொரு முறையும் ஒரு கட்டண வாயில் வழியாக வாகனம் செல்லும்போது 4 திர்ஹம் அவர்களின் கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது.

காலவரிசை[தொகு]

 • 1 சூலை 2007 இரண்டு சுங்க வாயில்கள், ஒன்று அல் கர்ஹூத் பாலம் அருகேயும், ஷேக் ஜாயித் சாலையில் மால் ஆஃப் எமிரேட்ஸ் அருகேயும் நிறுவப்பட்டது.
 • செப்டம்பர் 2008 இல் மேலும் இரண்டு வாயில்கள் மக்தூம் பாலம் அருகே மற்றும் அல் சஃபா பூங்கா அருகேயும் நிறுவப்பட்டன.
 • 2007 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு அல்லது மூன்று சாலிக் நுழைவாயில்களை கடந்தாலும் 4 திர்ஹாம் மட்டுமே கணக்கிலிருந்து கழிக்கப்பட்டது, மேலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 24 திர்ஹாம் பெறப்பட்டது. 2013 ஆம் ஆண்டிற்க்கு பின்னர் இம்முறை மாற்றியமைக்கப்பட்டு எத்தனை முறை நுழைவாயில்களை கடந்தாலும் ஒவ்வொரு நுழைவுக்கும் 4 திர்ஹாம் வீதம் கழிக்கப்படுகின்றது.

நிறுவப்பட்டுள்ள பிற இடங்கள்[தொகு]

 • அல் கர்ஹூத் பாலம்
 • அல் பர்ஷா (மால் ஆஃப் எமிரேட்ஸ்)
 • அல் மக்தூம் பாலம்
 • அல் மம்ஜார் (வடக்கு)
 • அல் மம்ஜார் (தெற்கு)
 • விமான நிலைய சுரங்கப்பாதை
 • அல் சபா
 • ஜெபல் அலி

ஆதாரங்கள்[தொகு]