சாலக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாலக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலையம் (Agronomic Research Station, Chalakudy) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு வேளாண் ஆராய்ச்சி நிலையமாகும். இந்த ஆராய்ச்சி நிலையம் கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் மத்திய மண்டலத்தின் கீழ் உள்ளது. சாலக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலையம் கேரள வேளாண் துறையால் 1972ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1972ஆம் ஆண்டு கேரள வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையம் கேரள வேளாண் பல்கலைக்கழகத்தால் கையகப்படுத்தப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ஐ. சி. ஏ. ஆர்) நிதியுதவி வழங்கி செயல்படுத்தும் நீர் மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த இந்த நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நீர் மேலாண்மை ஆராய்ச்சி திட்டம் 1974 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இந்த ஆராய்ச்சி நிலையம் கரிம உரமிடுதல் பிரிவில் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

  • Official Website [1]