சார் பிரம்மாநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார் பிரம்மாநகர்
Char Brahmanagar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நதியா
அரசு
 • வகைகணக்கெடுப்பில் உள்ள ஊர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்5,307
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
இணையதளம்nadia.nic.in

சார் பிரம்மாநகர் (Char Brahmanagar) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிருட்டிணாநகர் சதார் உட்கோட்டத்தில் இடம்பெற்றுள்ள நபாத்விப் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்[1]

புவியியல் அமைப்பு[தொகு]

பாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது[2].

23.25° வடக்கு 88.22° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சார்பிரம்மா நகரம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[3] சார்பிரம்மா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5,307 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 66% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 74 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 57 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 9% அளவில் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Wise List of Statutory Towns". Census of India 2001, Urban Frame. Directorate of Census Operations, West Bengal. மூல முகவரியிலிருந்து 2007-09-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-10-06.
  2. Gangopadhyay, Basudev, Paschimbanga Parichay, 2001, (வங்காள மொழியில்), p. 70, Sishu Sahitya Sansad
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_பிரம்மாநகர்&oldid=2051730" இருந்து மீள்விக்கப்பட்டது