சார்லஸ் டி கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சார்ல்ஸ் டி கோல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சார்லஸ் டி கோல்
De Gaulle-OWI.jpg
சுதந்திர பிரெஞ்சுப் படையின் தலைவர்
பதவியில்
18 ஜூன் 1940 – 3 ஜூலை 1944
முன்னவர் மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசு
பின்வந்தவர் பிரெஞ்சுக் குடியரசின் இடைக்கால அரசு
பிரெஞ்சுக் குடியரசின் இடைக்கால அரசின் அதிபர்
பதவியில்
3 ஜூலை 1944 – 20 ஜனவரி 1946
முன்னவர் பிலிப்பே Pétain (நாட்டுத் தலைவர்)
பியரே லாவல் (பிரதமர்)
பின்வந்தவர் Felix Gouin
பிரான்சின் பிரதம அமைச்சர்
பதவியில்
1 ஜூன் 1958 – 8 ஜனவரி 1959
குடியரசுத் தலைவர் ரெனே கோட்டி
முன்னவர் Pierre Pflimlin
பின்வந்தவர் Michel Debré
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
1 ஜூன் 1958 – 8 ஜனவரி 1959
குடியரசுத் தலைவர் ரெனே கோட்டி
பிரதமர் சார்லஸ் டி கோல்
முன்னவர் Pierre de Chevigné
பின்வந்தவர் Pierre Guillaumat
பிரெஞ்சுக் குடியரசின் அதிபர்
பதவியில்
8 ஜனவரி 1959 – 28 ஏப்ரல் 1969
பிரதமர் Michel Debré (1959-1961)
ஜார்ஜ் பொம்பிடூ
(1962-1968)
Maurice Couve de Murville
(1968-1969)
முன்னவர் René Coty
பின்வந்தவர் ஜார்ஜ் பொம்பிடூ
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 22, 1890(1890-11-22)
Lille
இறப்பு 9 நவம்பர் 1970(1970-11-09) (அகவை 79)
Colombey-les-Deux-Églises
அரசியல் கட்சி குடியரசுக்கான சனநாயகவாதிகள் ஒன்றியம்
வாழ்க்கை துணைவர்(கள்) Yvonne de Gaulle
பணி படைத்துறை
சமயம் உரோமன் கத்தோலிக்கர்

சார்லஸ் டி கோல் எனப் பரவலாக அறியப்படும் சார்லஸ் அண்ட்ரே ஜோசெப் மாரீ டி கோல் (Charles André Joseph Marie de Gaulle - 22 நவம்பர் 1890 – 9 நவம்பர் 1970) பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது சுதந்திர பிரான்ஸ் படைகளுக்கு இவர் தலைமை தாங்கினார். பின்னர் ஐந்தாம் பிரெஞ்சுக் குடியரசை நிறுவிய இவர் அதன் முதல் அதிபராகவும் பணியாற்றினார். இவர் ஜெனரல் டி கோல் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

முதலாம் உலகப் போர்ப் பட்டறிவும் கொண்ட இவர், 1920களிலும், 1930களிலும் கவசவண்டிப் போர்முறையின் ஆதரவாளராகவும், படைத்துறையில் வானூர்திகளைப் பயன்படுத்துவதன் ஆதரவாளராகவும் முன்னணிக்கு வந்தார். பதுங்குகுழிப் போர்களில் ஏற்படக்கூடிய இழுபறி நிலையைப் போக்குவதற்கு இதுவே வழி என அவர் கருதினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இவர் பிரிகேடியர் ஜெனரல் என்னும் தரநிலைக்கு உயர்ந்தார். 1940 ஆம் ஆண்டின் பிரான்ஸ் வீழ்ச்சியின் போது இடம்பெற்ற போர்களில் சில வெற்றிகரமான எதிர்த் தாக்குதல்களை நடத்திய படைகளை இவர் வழி நடத்தினார். பின்னர் இங்கிலாந்தில் நாடுகடந்து வாழ்ந்த பிரான்ஸ் படையினரை ஒன்று சேர்த்து, "சுதந்திர பிரெஞ்சுப் படையை" அமைத்தார். நாசி ஜேர்மனியை எதிர்க்குமாறு பிரான்ஸ் நாட்டினரைக் கோரி 1940 ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய வானொலிப் பேச்சு மிகவும் புகழ் பெற்றது. 1944 ஆம் ஆண்டில் பிரான்சை மீட்ட பின், உருவான பிரான்ஸ் இடைக்கால அரசில் இவர் பிரதமர் ஆனார். அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1946 ஆம் ஆண்டில் அவர் அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். 1958 மேயில் உருவான நெருக்கடியைத் தொடர்ந்து படையினரின் துணையோடு இவர் மீண்டும் பதவியில் அமர்ந்தார். டி கோல், ஐந்தாம் குடியரசை நிறுவுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதை வழி நடத்திப் பின்னர் பிரான்சின் முதல் அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_டி_கோல்&oldid=1828267" இருந்து மீள்விக்கப்பட்டது