சார்ல்ஸ் அன்ரனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார்ல்ஸ் அன்ரனி (Charles Anthony) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகன் ஆவார்[1].

பெயர்க் காரணம்[தொகு]

தனது இயக்கத்தின் படைத் தளபதிகளுள் ஒருவரான சார்லஸ் அந்தோணி சீலனின் நினைவாக தனது மகனுக்கு சார்ல்ஸ் அன்ரனி என பிரபாகரன் பெயரிட்டார்[2].

கல்வி[தொகு]

உயர்கல்வி பயில அயர்லாந்துக்கு அனுப்பப்பட்ட சார்ல்ஸ் அன்ரனி, வானூர்திப் பொறியியலில் பட்டம் பெற்றார்.

ஈழப் போராட்டப் பங்களிப்பு[தொகு]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.

இறப்பு[தொகு]

2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்டப் போரில் சார்ல்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் 2009 மே 18, அன்று அறிவித்தது.[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "SL govt releases picture of Charles Anthony Prabhakaran". indiatodayin. 7 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.
  2. "Passport for Prabakaran's son?". தி இந்து. 26 பிப்ரவரி 2003. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Most of LTTE top brass killed: Army". தி இந்து. 19 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_அன்ரனி&oldid=3605705" இலிருந்து மீள்விக்கப்பட்டது