சார்லி அண்ட் த சாக்லேட் பேக்டரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார்லி அண்ட் த சாக்லேட் பேக்டரி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். இது இசை மற்றும் [[நகைச்சுவைத் திரைப்படம் வகையைச் சார்ந்தத் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குநர் டிம் பர்டன், எழுத்தாளர் ஜான் ஆகஸ்ட். இத்திரைப்படம் ரூவால் டால் எழுதி 1964 ஆம் ஆண்டு வெளியான சார்லி அண்ட் த சாக்லேட் பேக்டரி எனும் பிரித்தானிய நூலிலிருந்து எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இந்த கதையை தமிழில் "சார்லியின் இனிப்புத் தொழிற்சாலைப் பயணம்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் பாஸ்கர் சக்தி. விகடன் பிரசுரம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. ஜானி டெப் வில்லி வான்கா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். ஃப்ரெட்டி ஹைமோர் சார்லி பக்கெட் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். வில்லி வான்காவின் ஐந்து தங்க கடவுச்சீட்டுகளை வெல்லும் ஐந்து குழந்தைகள் உலகின் மிக பிரம்மாண்டமான ஆச்சரியமூட்டும் வில்லி வான்காவின் சாக்லேட் தொழிற்சாலையை சுற்றி பார்ப்பதே இத்திரைப்படத்தின் கதை.

ரூவால் டாலின் கதையை மய்யமாக வைத்து 1971 இல் வெளியான வில்லி வான்கா அண்ட் த சாக்லேட் பேக்டரி எனும் திரைப்படத்தின் மறுபதிப்பே இத்திரைப்படம் ஆகும். மறு உருவாக்கம் பற்றிய விவாதங்கள் 1991 இல் தொடங்கப்பட்டு வார்னர் புரோஸ். நிறுவனம் படத்திற்கு தேவையான இடத்தினையும் கலை அமைப்பினையும் செய்து தர முன்வந்தது. இயக்குநர் டிம் பர்டனுக்கு முன் மார்ட்டின் ஸ்கோர்செசி போன்ற பல இயக்குநர்களுடன் விவாதிக்கப்பட்டது. அதேபோல வில்லி வான்கா கதாபாத்திரத்திற்கும் நிக்கோலஸ் கேஜ், ஜிம் கேரி, பிராட் பிட், வில் சிமித், ஆடம் சேண்ட்லர் ஆகியோருடன் விவாதிக்கப்பட்டது. பின்னர் டிம் பர்டன் ஜானி டெபையும், டானி என்ஃமேனையும் முடிவு செய்தார். இத்திரைபடத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததுடன் மிகப் பெரிய வசூலையும் ஈட்டியது. உலகம் முழுவது மொத்தம் நாநூற்று எழுபத்தியைந்து அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது.

கதை[தொகு]

சார்லி பக்கெட் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த நல்ல சிறுவன். அவனது தாய் தந்தையருடனும் நான்கு வயதான அவனின் தாத்தா பாட்டியினுடனும் வசித்து வந்தான். அவன் தந்தை ஒரு பற்பசை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலைப் பார்த்தார். அவரின் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தொழில்நுட்ப வளர்ச்சியால் அவர் வேலை இழந்தார். சார்லியின் தாத்தா ஜோ வில்லி வான்காவின் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். ஒரு நாள் வில்லி வான்கா அனைத்து தொழிளாலர்களையும் வேலையை விட்டு நீக்கினார். தொழிற்சாலையின் கதவுகள் வில்லி வான்காவைத் தவிர அனைவருக்கும் பூட்டப்பட்டது. ஆனல் சாக்லேட் உற்பத்தி மட்டும் வழக்கம் போல் நடைபெற்று வந்தது. வெளி உலகத்தினர் அனைவரும் மனிதர்கள் இல்லாமல் எவ்வாறு இவ்வளவு சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன எனும் சந்தேகம் தொற்றிக் கொண்டது. இந்த சமயத்தில் வில்லி வான்கா அவரின் ஐந்து சாக்லேட் கட்டிகளில் தங்க கடவுச்சீட்டுகளை வைத்து விநியோகம் செய்கிறார். ஐந்து கடவுச்சீட்டுகளை பெறுவோருக்கும் வான்காவின் தொழிற்சாலையை பார்வையிட வாய்ப்பும், ஆயுட்காலம் முழுவதும் இலவச சாக்லேட் தரப்படும் எனவும் போட்டியை அறிவிக்கிறார். சார்லியுடன் சேர்த்து ஐவருக்கு தங்க கடவுச்சீட்டுகள் கிடைக்கின்றன. ஐவருடனும் குடும்ப உறுப்பினர் ஒருவர் வரலாம் என்பதால் சார்லியுடன் தாத்தா ஜோவும் தொழிற்சாலைக்கு வருகிறார். மிகப் பிரமாண்டமான சாக்லேட் தொழிற்சாலையில் ஒம்பா லொம்பா எனப்படும் குள்ள மனிதர்கள் வேலை செய்தனர். அதிகமான சாக்லேடை பார்த்து ஒவ்வொரு குழந்தைகளாக தன்னிலை மறந்து தொழிற்சாலையிலிருந்து தவறு செய்து வெளியேறுகின்றனர். இறுதி வரை இருக்கும் சார்லியை தனக்கு பிறகு தொழிற்சாலையை பார்த்துக் கொள்ளுமாறும், அதற்காக குடும்பத்தை விட்டு தன்னுடன் தங்கிக் கொள் என்றும் வில்லி வான்கா அழைப்பு விடுக்கிறார். குடும்பத்தை விட்டு வர முடியாது என மறுக்கும் சார்லியைப் பார்த்து குடும்ப உறவின் அருமையை வான்கா உணர்கிறார். பின் சார்லி குடும்பத்தில் ஒருவராகவே வில்லி வான்கா தன் வாழ்நாளை கடக்கின்றார்.

நடிகர்கள்[தொகு]

  • ஜானி டெப் - வில்லி வான்கா
  • பிளையர் டன்லப் - இளம் வயது வில்லி வான்கா
  • ஃப்ரெட்டி ஹைமோர் - சார்லி பக்கெட்
  • டேவிட் கெல்லி - ஜோ தாத்தா
  • டீப் ராய் - ஓம்பா - லோம்பா
  • அன்னாசோபியா ராப் - வயலட் பெகார்டி
  • பிலிப் வெய்க்ரட்ஸ் - அகஸ்டஸ் குலூப்
  • ஜூலியா வின்டர் - வெருகா சால்ட்
  • ஜோர்டான் ஃப்ரை - மைக் டீவீ
  • கெலனா போஹம் கார்டர் - திருமதி. பக்கெட்
  • நோவா டெய்லர் - திரு. பக்கெட்
  • மிஸ்ஸி பைல் - திருமதி பெகார்டி
  • ஜேம்ஸ் பாக்ஸ் - திரு. சால்ட்
  • ஆதாம் காட்லே - திரு. டீவீ
  • ஃபிரேன்சிஸ்கா ட்ராஞ்சர் - திருமதி குலூப்
  • கிரிஸ்டோபர் லீ - டாக்டர். வில்பர் வான்கா
  • லிஸ் ஸிமித் - ஜார்ஜினா பாட்டி
  • எலியன் எஸ்செல் - ஜோசபின் பாட்டி
  • டேவிட் மோரிஸ் - ஜார்ஜ் தாத்தா

வெளியீடு மற்றும் வசூல்[தொகு]

இத்திரைப்படத்தின் வெள்ளோட்டமானது ஜூலை 10, 2005 அன்று சீனாவில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வின் மொத்த வசூல் தொகையும் மேக் அ விஷ் எனும் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டது.[1] அமெரிக்க நாட்டில் இத்திரைப்படம் ஜூலை 15, 2005 அன்று 3,770 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.[2] .[3] இத்திரைப்படம் 56,178,450 அமெரிக்க டாலர்களை முதல் வாரம் வசூல் செய்தது.[4] இது 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் முதல் வாரத்தின் வசூல் அடிப்படையில் ஐந்தாவது அதிகப்படியான வசூலாகும். தொடர்ந்து இரு வாரங்கள் இத்திரைப்படம் வசூலில் முதலிடத்திலேயே இருந்தது. அமெரிக்காவில் மட்டும் 206,459,076 அமெரிக்க டாலர்களும், வெளிநாடுகளில் 268,509,687 அமெரிக்க டாலர்களும் வசூல் செய்தது. மொத்தமாக உலகம் முழுவதுமிருந்து 474,968,763 அமெரிக்க டாலர்களை இத்திரைப்படம் வசூல் செய்தது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Campbell Robertson (July 12, 2005). "Premieres to Avoid: Charlie and the Tripe Factory". The New York Times. 
  2. "Charlie and the Chocolate Factory". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் June 11, 2009.
  3. Tamsen Tillson (December 16, 2004). "'Wonka' pic blown up". Variety (magazine). http://www.variety.com/article/VR1117915125. பார்த்த நாள்: June 10, 2009. 
  4. "2005 Domestic Grosses". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் June 11, 2009.
  5. "2005 Worldwide Grosses". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் June 11, 2009.