சார்லஸ் டார்வின் அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சார்லசு டார்வின் அறக்கட்டளை (Charles Darwin Foundation) என்பது 1959ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் ஆகிய அமைப்பின் முயற்சியின்கீழ் நிறுவப்பட்டது. சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி மையம் இந்த அறக்கட்டளையின் தலைமையகமாக செயல்படுகிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் கல்வியை ஊக்குவிக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. சார்லஸ் டார்வின் அறக்கட்டளை எக்குவோடரில், கலாபகோசு, சாண்டா குரூசு தீவு, புவேர்ட்டோ அயோராவில் அமைந்துள்ளது.[1]

சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையம்[தொகு]

சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையம் சார்லஸ் டார்வின் அறக்கட்டளையால் இயக்கப்படும் ஓர் உயிரியல் ஆராய்ச்சி நிலையமாகும். இவ்வாராய்ச்சி நிலையம் கலிபகோஸ் தீவுகளில் உள்ள பியூர்டோ அயோரா கிராமத்தில் அகாடமி விரிகுடாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. 1959 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1964 ஆம் ஆண்டு நாட்டுக்காக அர்பணிக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம் ஆகும். இயற்கை வரலாற்றினை விளக்குவதற்காகவும், கலாபகோஸ் தீவுகளின் பாதுகாப்பு கல்விக்காகவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

நோக்கங்கள்[தொகு]

  • அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றச்சூழல் கல்வியில் பாதுகாப்பு
  • கலை ஆராய்ச்சி மற்றும் கண்கானிப்பு திட்டங்கள்
  • கலாபாகோஸ் தேசிய பூங்கா சேவை
  • கலாபாகோஸில் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆதார விவகாரங்களுக்கான பிரதான அரசாங்க அதிகாரியாக செயல்படுவது.
  • சுற்றுச்சூழலியல் பற்றிய நல்ல புரிதல் மற்றும் தீவுகளில் இயற்கை வளங்களின் மேலாண்மை.
  • விஞ்ஞான ஆய்வுகளை மேம்படுத்துதல், வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
  • தீவுகளில் விஞ்ஞான ஆய்வு மற்றும் கல்வி சம்மந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்துதல்.
  • 2002 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்திற்கு சர்வதேச காங்மோஸ் பரிசு வழங்கப்பட்டது.

படங்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Galapagos Conservancy's ANNUAL REPORT 2011-2012" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24.

வெளிபுற இணைப்புகள்[தொகு]