சார்லசு பொன்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார்லசு பொன்சி
Charles Ponzi.jpg
1920களில் பொன்சி; தனது பாஸ்டன் அலுவலகத்தில் பணிபுரிகையில்
பிறப்புகார்லோ பீட்ரோ கியோவன்னி குயிக்லெல்மொ டெபல்டொ பொன்சி
மார்ச்சு 3, 1882(1882-03-03)
லூகோ, எமிலியா-ரோமாஞா, இத்தாலிய இராச்சியம்
இறப்புசனவரி 18, 1949(1949-01-18) (அகவை 66)
இரியோ டி செனீரோ, பிரேசில்
குற்றம்பொய்யாவணம்; அஞ்சல் ஏமாற்று (கூட்டரசு), களவு (மாநில அரசு)
தண்டனை3 ஆண்டுகள் 1908-1911; 5 ஆண்டுகள் கூட்டரசு (மாநிலத் தண்டனைக்கு முன்னதாக மூன்றரை ஆண்டுகள்) 1920-1922; 9 ஆண்டுகள் மாநிலம் 1927-1934; 1934இல் நாட்டை விட்டு வெளியேற்றம்
தொழில்நம்பிக்கை ஏமாற்று
துணைவர்உரோசு குனெக்கோ (1918-1937, மணமுறிவு)
பெற்றோர்இராபர்ட்டோ , மரியா பொன்சி
பிள்ளைகள்இல்லை

கார்லோ பீட்ரோ கியோவன்னி குயிக்லெல்மொ டெபல்டொ பொன்சி (Carlo Pietro Giovanni Guglielmo Tebaldo Ponzi, மார்ச்சு 3, 1882 – சனவரி 18, 1949), பரவலாக சார்லசு பொன்சி, இத்தாலிய வணிகரும் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் ஏமாற்றுக் கலைஞரும் ஆவார். இவர் சார்லசு பொன்சி, கார்லோ, சார்லசு பி. பியான்சி என்ற பெயர்களில் இயங்கினார்.[1] தள்ளுபடி செய்யப்பட்ட அஞ்சல் சீட்டுக்களை பிறநாடுகளில் வாங்கி ஐக்கிய அமெரிக்காவில் அவற்றை அவற்றின் முகமதிப்பிற்கு விற்பதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு 45 நாட்களில் 50% இலாபம் அல்லது 90 நாட்களில் 100% ஈட்டித் தருவதாக உறுதிகூறினார்.[2][3] உண்மையில், பொன்சி துவக்க வாடிக்கையாளர்களுக்கு பிந்தைய சேமிப்பாளர்களின் முதலீடு கொண்டு பட்டுவாடா செய்தார். இத்தகைய முறை தற்போது "பொன்சி முறைமை" என அறியப்படுகின்றது. இவரது திட்டம் ஓராண்டுக்கு செயல்பட்டு பின்னர் மூழ்கியது; இதனால் இவரது முதலீட்டாளர்களுக்கு $20 மில்லியன் நட்டம் ஏற்பட்டது.

பொன்சிக்கு முன்னதாக புரூக்லினில் புத்தகக்கடை வைத்திருந்த வில்லியம் எஃப்.மில்லர் 1899இல் இத்தகைய திட்டத்தை செயற்படுத்தி $1 மில்லியன் ஈட்டியிருந்தார்.[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. iPad iPhone Android TIME TV Populist The Page (1931-01-05). "Business & Finance: Ponzi Payment". TIME. பார்த்த நாள் 2013-07-16.
  2. "Ponzi Payment", TIME magazine, January 5, 1931, http://www.time.com/time/magazine/article/0,9171,930255,00.html, பார்த்த நாள்: December 21, 2008, "In 1920 thousands of gullibles had a more ornate picture of him. He was then the shrewd, straight-eyed miracle man of Boston's Hanover Street. He promised his clients a 50% profit in 45 days. ... The essence of his scheme was to buy postal reply coupons in countries with depreciated exchange, redeem them at face value for U. S." 
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; take என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "In Ponzi We Trust", Smithsonian magazine, December 1998, http://www.smithsonianmag.com/people-places/In-Ponzi-We-Trust.html, பார்த்த நாள்: December 21, 2008, "Ponzi himself was probably inspired by the remarkable success of William "520 percent" Miller, a young Brooklyn bookkeeper who in 1899 fleeced gullible investors to the tune of more than $1 million." 

நூற்றொகை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_பொன்சி&oldid=2696884" இருந்து மீள்விக்கப்பட்டது