சார்லசு பிலிப் பிரௌன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லசு பிலிப் பிரௌன்
பிறப்பு(1798-11-10)10 நவம்பர் 1798
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு12 திசம்பர் 1884(1884-12-12) (அகவை 86)
இலண்டன்
தொழில்ஆட்சிப் பணியாளர்
தேசியம்பிரித்தானியர்
கல்விஇந்தியக் குடிமைப் பணி
இலக்கிய இயக்கம்தெலுங்கு புத்தகங்களின் தொகுப்பு
குறிப்பிடத்தக்க படைப்புகள்தெலுங்கு அகராதி

சார்லஸ் பிலிப் பிரவுன் (Charles Philip Brown) (10 நவம்பர் 1798 - 12 டிசம்பர் 1884) கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியாக இருந்தார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் பணிபுரிந்தார். மேலும் இவர் தெலுங்கு மொழி இலக்கியத்தில் ஒரு முக்கியமான அறிஞருமாவார்.

18 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு இலக்கியம் செயலற்ற நிலையில் இருந்தது. பல சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக - படைப்பாற்றல் தெலுங்கு கவிஞர்களின் பற்றாக்குறை, நடைமுறையில் உள்ள கல்வியறிவின்மை மற்றும் தெலுங்கு இலக்கியத்தின் புரவலர்களாக விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி ஆகியவை இதற்கு காரணங்களாக இருந்தது. பிரவுன், பிராந்தியத்தில் அதிகாரியாக, படைப்புகளை சேகரித்து திருத்தினார். தெலுங்கு மொழியின் பாரம்பரியத்தை காப்பாற்றியதாக நம்பினார். தனது சொந்த வார்த்தைகளில் இவ்வாறு கூறுகிறார்;

"தெலுங்கு இலக்கியம் அழிந்து கொண்டிருந்தது; சாக்கெட்டில் சுடர் மினுமினுத்தது. 1825 இல், தெலுங்கு இலக்கியம் இறந்து கிடப்பதைக் கண்டேன். 30 ஆண்டுகளில் அதை உயிர்ப்பித்தேன்". [1] [2]

பிரவுனின் வாழ்க்கையை ஆய்வு செய்த ஜனமத்தி அனுமத் சாத்திரி, இவரது நினைவாக கடப்பாவில் ஒரு நூலகத்தை நிறுவினார். [3]

சுயசரிதை[தொகு]

சார்லசு பிரவுன், 1798 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை டேவிட் பிரவுன் ஒரு அனாதை இல்லத்தின் மேலாளராகவும், சமசுகிருதம் உட்பட பல மொழிகளில் அறிஞராகவும் இருந்தார். சார்லசு பிரவுன் 1812 இல் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இந்தியாவில் குடிமைப்பணி பதவிக்கான ஹெய்லிபரி கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக மீண்டும் இங்கிலாந்து சென்றார். ஆகஸ்ட் 4, 1817 அன்று சென்னை திரும்பினார் [4]

1820 ஆம் ஆண்டு, மெட்ராஸ் ஆளுநர் தோமஸ் முன்ரோ, ஒவ்வொரு அதிகாரியும் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வெலகபுடி கோதண்டராம பந்துலுவின் வழிகாட்டுதலின் கீழ் பிரவுன் தெலுங்கைத் தேர்ந்தெடுத்தார். மேலும் அந்த ஆண்டு தெலுங்குமொழித் தேர்விலும் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இவர் கடப்பாவின் ஆட்சியராக இருந்த ஜான் ஹன்பரிக்கு துணை ஆட்சியரானார். ஹன்பரி தெலுங்கில் சரளமாக இருந்த காரணத்தால் பிரவுன் தனது படிப்பைத் தொடர்ந்தார். [5] [6] 1822 இல் மச்சிலிப்பட்டிணத்திற்கும் பின்னர் 1825 இல் ராஜமன்றிக்கும் மாற்றப்பட்டார். 1832-33 பஞ்சத்தின் தொடக்கத்தில் குண்டூருக்கு பணியமர்த்தப்பட்டார். [7]

பிரவுன் 1834 இல் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் இலண்டனுக்குச் சென்று 1835 முதல் 1838 வரை அங்கேயே இருந்தார். 1837 இல் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாரசீக மொழிபெயர்ப்பாளராக மீண்டும் சென்னை திரும்பினார். மேலும், மெட்ராஸ் கல்லூரி வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்தார். உடல்நலக் காரணங்களால் 1854 இல் ஓய்வு பெற்று மீண்டும் இலண்டனுக்குத் திரும்பினார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் தெலுங்கு பேராசிரியராக சில காலம் பணியாற்றினார். [4]

மரபு[தொகு]

பன்மொழிப் புலமை இருந்தாலும் பிரவுன் தெலுங்கில் கவனம் செலுத்தினார். [8] பிற மொழிகள் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம் மற்றும் சமசுகிருதம் ஆகியவை பிரவுன் அறிந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெலுங்கை மூன்று வழிகளில் ஆதரித்தார் - தனது சொந்த படைப்புகளை உருவாக்கினார். பழைய படைப்புகளை மீட்டெடுத்தார் மற்றும் கண்டுபிடித்தார். தெலுங்கில் புத்தகங்களை அச்சிட்டார். தானே நிதியுதவி செய்தார், சில சமயங்களில் கடன் வாங்கினார். கடப்பாவில் இரண்டு இலவசப் பள்ளிகளையும் மச்சிலிப்பட்டணத்தில் மேலும் இரண்டு பள்ளிகளையும் நிறுவினார்.

இறப்பு[தொகு]

இவர் 1884 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தனது எண்பத்தேழு வயதில் இறந்தார். மேலும், இலண்டனில் உள்ள கென்சல் பசுமை கல்லறையில் (அனைத்து ஆத்மாக்களின் பொது கல்லறை) அடக்கம் செய்யப்பட்டார்.

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Peter L. Schmitthenner (2001). Telugu Resurgence: C.P. Brown and Cultural Consolidation in Nineteenth-century South India. Manohar. பக். 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7304-291-1. https://archive.org/details/teluguresurgence0000schm. 
  2. Vijñāna Sarasvati. The Institute. 1984. பக். 54. 
  3. "Janamaddi passes away". HMTV. பார்க்கப்பட்ட நாள் 17 August 2016.
  4. 4.0 4.1 Lane-Poole 1889.
  5. Peter L. Schmitthenner (2001). Telugu Resurgence: C.P. Brown and Cultural Consolidation in Nineteenth-century South India. Manohar. பக். 66–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7304-291-1. https://archive.org/details/teluguresurgence0000schm. 
  6. Vijñāna Sarasvati. The Institute. 1984. 
  7. Peter L. Schmitthenner (2001). Telugu Resurgence: C.P. Brown and Cultural Consolidation in Nineteenth-century South India. Manohar. பக். 109–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7304-291-1. https://archive.org/details/teluguresurgence0000schm. 
  8. [1] பரணிடப்பட்டது 2 சூலை 2018 at the வந்தவழி இயந்திரம், Excerpts from the 1906 edition of Linguistic Survey of India (Telugu).

குறிப்புகள்[தொகு]

  •  Lane-Poole, Stanley (1886). "Brown, Charles Philip". Dictionary of National Biography 7. London: Smith, Elder & Co. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Charles Phillip Brown
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_பிலிப்_பிரௌன்&oldid=3849087" இலிருந்து மீள்விக்கப்பட்டது