சார்மா செத்லெனீத்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்மா செத்லெனீத்சே
பிறப்புநவம்பர் 4, 1939(1939-11-04)
ரீகா, லாத்வியா

சார்மா செத்லெனீத்சே (Sarma Sedleniece) என்பவர் லாத்வியா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீராங்கனையாவார். 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1968 ஆம் ஆண்டு அந்நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான லாத்வியா சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வென்றார். இப்போட்டியில் 1971 இல் இரண்டாமிடமும் 1972 இல் மூன்றாம் இடமும் இவருக்குக் கிடைத்தது. லாத்வியா சதுரங்க மாசுட்டர் என்ற பட்டமும் இவருக்கு உண்டு.

சார்மா செத்லெனீத்சே தனது 13 ஆம் வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். தனது 15 ஆம் வயதில் முதல்முறையாக லாத்விய பெண்கள் சதுரங்கப் போட்டியை வென்றார். மேலும் மூன்று முறை (1955–1957) இப்பட்டத்தை சர்மாசெட்லெனீசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். லாத்வியாவின் தலைநகரமான ரீகா நகரில் நடைபெற்ற பெண்கள் சதுரங்கப் போட்டியையும் 1959, 1960, 1969 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் இவர் நான்கு முறை வென்றார்.

உருசியாவின் தொன்-மீது-ரசுத்தோவ் நகரில் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற அணிகளுக்கான சதுரங்கப் போட்டியில் லாத்விய அணியான தௌகவா அணியில் எட்டாவது பலகையில் இவர் விளையாடினார்[1]. அஞ்சல் வழி சதுரங்க விளையாட்டுப் போட்டியிலும் இவர் சிறந்து விளங்கினார். 1969-1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்களுக்கான அஞ்சல் வழி சதுரங்கப் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் பெற்றார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://al20102007.narod.ru/team_ch/1971/rostov71.html
  2. "LK?F -1.SIEVIESU. ?empion?ts". Lksf.lv. 2011-10-14 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

  • Sarma Sedleniece player profile at 365chess.com
  • Sarma Sedleniece player profile at olimpbase.org
  • Žuravļevs, N.; Dulbergs, I.; Kuzmičovs, G. (1980), Latvijas šahistu jaunrade, Rīga, Avots., pp. 106 – 107 (in Latvian).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்மா_செத்லெனீத்சே&oldid=2960449" இருந்து மீள்விக்கப்பட்டது