சார்பெல் மக்லூஃப்
சார்பெல் மக்லூஃப் | |
|---|---|
புனித சார்பெல் மக்லூஃப் | |
| குரு மற்றும் துறவி | |
| பிறப்பு | மே 8, 1828 பேக்கா காஃப்ரா, லெபனான் |
| இறப்பு | திசம்பர் 24, 1898 (அகவை 70) புனித மாரோன் துறவு மடம், லெபனான் |
| வணங்கும் திருஅவைகள் | கத்தோலிக்க திருச்சபை (லுறிப்பாக மேரோனைட் அவைh) |
| அருளாளர் பட்டம் | 5 டிசம்பர் 1965, புனித பேதுரு's Basilica, வத்திக்கான் நகர் by திருத்தந்தை ஆறாம் பவுல் |
| புனிதர் பட்டம் | 9 அக்டோபர் 1977, புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர் by திருத்தந்தை ஆறாம் பவுல் |
| முக்கிய திருத்தலங்கள் | புனித மாரோன் துறவு மடம், லெபனான் |
| திருவிழா | ஜூலை மூன்றாம் ஞாயிறு (மேரோனைட் நாட்காட்டி) ஜூலை 24 (உரோமை கத்தோலிக்கம்) |
| சித்தரிக்கப்படும் வகை | துறவு ஆடை செபமாலைக் கயிறு |
| பாதுகாவல் | லெபனான் |
சார்பெல் மக்லூஃப் (அரபி: شربل مخلوف, மே 8, 1828 - டிசம்பர் 24, 1898) என்பவரது இயற்பெயர் யூசுப் அன்துவான் மக்லூஃப் ஆகும். இவர் தற்கால லெபனானைச் சேர்ந்த ஒரு மேரோனைட் துறவி மற்றும் குரு ஆவார். இவரது வாழ்நாளில், இவர் தனது புனிதத்தன்மைக்காகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் துருஸ் இனக்குழுவினரிடையே ஒற்றுமை வர உழைத்ததற்காகவும் அறியப்படுகின்றார்.[1]
லெபனானின் அன்னாயாவில் உள்ள புனித மாரோன் மடத்தில் இவரது கல்லறை உள்ளது. அங்கே மன்றாடி இவரது பரிந்துரையினால் பல புதுமைகள் நடப்பதாக நம்பப்படுகின்றது. இதனால் லெபனானில் வாழும் கிறிஸ்தவர்களிடையே இவர் "புதுமைகள் செய்யும் துறவி" என்று அறிபப்படுகின்றார். 1965 ஆம் ஆண்டு இவருக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. மேலும் 1977 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுலால் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவரின் விழா நாள் லத்தீன் திருஅவையில் ஜூலை 24 அன்றும், மரோனைட் திருஅவையில் ஜூலை மூன்றாம் ஞாயிறன்றும் கொண்டாடப்படுகின்றது.
வாழ்க்கைச் சுறுக்கம்
[தொகு]தொடக்க கால வாழ்க்கை
[தொகு]துறவியாக
[தொகு]1851 ஆம் ஆண்டில், மக்லூஃப் மேஃபூக்கில் உள்ள துறவுமடத்தில் லெபனான் மேரோனைட் சபையின் துறவியாகப பயிற்சி பெறத் தொடங்கினார். பின்னர் அவர் பெய்ரூத்திற்கு அருகிலுள்ள பைப்லோஸ் மாவட்டத்தில் உள்ள உள்ள புனித மாரோன் மடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே, அவர் தனது துறவு உடையினைப் பெற்றார். அப்போது 2ஆம் நூற்றாண்டின் அந்தியோகிய கிறிஸ்தவ மறைசாட்சியின் நினைவாக சார்பெல் என்ற துறவுப்பெயரை ஏற்றார். இவர் நவம்பர் 1, 1853 அன்று தனது இறுதி துறவு வார்த்தைப்பாட்டினை வழங்கினார்.[2]
தனது குருத்துவ அருட்பொழிவுக்காக, மக்லூஃப், பத்ரூன் மாவட்டத்தின் கிஃபிஃபானில் உள்ள புனிதர்கள் சிப்ரியன் மற்றும் ஜஸ்டினா மடத்தில் மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பைத் தொடங்கினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 23, 1859 அன்று, பிகெர்க்கில் இவர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் புனித மாரோனின் மடாலயத்திற்குத் திருப்பிய இவர் அங்கேயே கடுமையானத் துறவு வாழ்வை வாழ்ந்தார்.
வனத்துறவு வாழ்க்கை
[தொகு]1875 ஆம் ஆண்டு, மடத்தின் தலைவரால் சார்பலுக்கு, மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் வனத்துறவு இல்லத்தில் துறவியாக வாழ அனுமதியளிக்கப்பட்டது. அங்கேயே இவர் அடுத்த 23 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர், டிசம்பர் 24, 1898 அன்று இறந்தார்.[3]
இறப்பும் வணக்கமும்
[தொகு]அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று மக்லூஃப் புனித மரோன் மடாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது உடலைக் கொண்டு செல்லும் போது, கடுமையான வானிலை காரணமாக, அடக்கம் செய்பவர்கள் தங்கள் கடமையைச் செய்வதில் இடையூறு ஏற்பட்டது.
" கிறிஸ்துமஸுக்கு முன்தின நாள் தந்தை சார்பெல் இறந்தார்; பனி அதிகமாக இருந்தது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரை மடத்திற்கு மாற்றினோம். நாங்கள் அவரை மாற்றுவதற்கு முன்பு, பனி வேகமாகப் பெய்து கொண்டிருந்தது, மேகங்கள் மிகவும் இருன்டிருந்தன. நாங்கள் அவரைச் சுமந்து சென்றபோது, மேகங்கள் மறைந்து, வானிலை தெளிவாகியது. – ஜார்ஜ் இம்மானுவேல் அபி-சசீன், அடக்க சடங்கினை நடத்தியவர்களில் ஒருவர் [4]
அவர் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, அவரது கல்லறையைச் சுற்றி ஒளிமயமாக காணப்பட்டதாக நம்பப்படுகின்றது. ஆகவே மடத்தின் மேலதிகாரிகள் இவரது கல்லறையினைத் திறந்தனர். அங்கே இவரது உடல் அழியாமல் இருப்பதைக்கண்டனர். அப்போது இவரது உடலில் இருந்து இரத்தம் போன்ற திரவம் வழிந்தது. துறை வல்லுனர்களாலும் மருத்துவர்களாலும் இவரின் உடல் அழியாது இருப்பதற்கு விளக்கம் அளிக்க இயலவில்லை. 1950 மற்றும் 1952 ஆம் ஆண்டுகளில், இவரது கல்லறை திறக்கப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இவரின் உடல் உயிருள்ள தோற்றத்தைக் கொண்டிருந்ததாகப் பதிவு செய்யதுள்ளனர்.[5] மேலும், 1950 ஆம் ஆண்டு இவரது உடல் தோண்டி எடுக்கப்பட்ட தொலைக்காட்சி நாடாவில், கல்லறை, மற்றும் சவப்பெட்டி துருப்பிடித்திருந்தாலும், மக்லூஃபின் உடல் அழியாது இருப்பது பதிவாகி உள்ளது.[6] இந்த நூற்றாண்டில் அவரது கல்லறை நான்கு முறை திறக்கப்பட்டுள்ளது. இறுதியாக 1976 ஆம் ஆண்டில் கல்லறை திறக்கப்பட்ட போது உடல் முற்றிலும் சிதைந்திருந்தது. எலும்புக்கூடு மட்டுமே எஞ்சியிருந்தது.[7]
2 செப்டம்பர் 2017 அன்று, புனித சார்பலின் திருப்பண்டங்கள் சிலோவாக்கியாவின் கோசிஸில் உள்ள புனித எலிசபெத் மறைமாவட்டப்பேராலயத்திற்கு மாற்றப்பட்டன, அங்கு "Púť k sv. Šarbelovi" (புனித சார்பலுக்கு திருயாத்திரை) என்று அழைக்கப்படும் ஒரு தியாத்திரை மாதந்தோறும் நடைபெறுகிறது. லெபனானில் இருந்து அதிகாரப்பூர்வமாக இவரது திருப்பண்டங்களைப் பெற்ற முதல் பேராலயம் இதுவாகும். இங்கே போலந்து, உக்ரைன் மற்றும் செக் குடியரசு போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் பலர் திருப்பயணம் மேற்கொள்கின்றனர்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Beaurepaire, Pierre-Yves (2017). Religious Interactions in Europe and the Mediterranean World: Coexistence and Dialogue from the 12th to the 20th Centuries. Taylor & Francis. p. 9. ISBN 9781351722179.
- ↑ "Monastery of St. Maron "Saint Charbel"". Archived from the original on 2016-03-04. Retrieved 2012-07-24.
- ↑ Hovannisian, R & Sabagh, G.; Religion and culture in medieval Islam, Cambridge University Press, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-62350-6 p113
- ↑ Awad, Mansour (1990). Three Lights from the East: A Biographical Account of the Lives of Saint Sharbel Makhlouf, Father Nematallah Hardini, Blessed Rebecca Rafka Er-Ryies. Norman Ferris (private publication).
- ↑ "St. Charbel(Sharbel) Makhluf". The Byzantine Forum.
- ↑ فتح قبر القديس شربل سنة 1950 - Opening the tomb of Saint Charbel (in ஆங்கிலம்), அக்டோபர் 13, 2013, archived from the original on 2021-12-22, retrieved 2020-03-28
- ↑ Bell, Ann (1991). Modern Saints: Their Lives and Faces.
- ↑ "Do košickej katedrály prichádza čoraz viac ctiteľov svätého Šarbela". www.tkkbs.sk. Retrieved 2021-11-15.