சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள்


ஒலிம்பிக் சின்னங்கள் கீழ்
தனிப்பட்ட ஒலிம்பிக் போட்டியாளர்கள்
போட்டியிடுகின்றனர்

ப.ஒ.கு குறியீடு   IOA, IOP
ஒலிம்பிக் வரலாறு
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள் (1992)
சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள் (2000)
சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள் (2012)
சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள் (2016)
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள் (2014)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தனிப்பட்ட ஒலிம்பிக் போட்டியாளர்கள் ( Independent Olympians at the Olympic Games) அல்லது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்கள் என்போர் அரசியல் சூழல், பன்னாட்டுத் தடைகள் தேசிய ஒலிம்பிக் குழுக்களின் இடைநீக்கம் மற்றும் இரக்க உணர்வு என்ற பல காரணங்களுக்காகத் தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சாராது தனித்துப் போட்டியிடும் மெய்வல்லுநர்கள் ஆவர். கிழக்குத் திமோர், தெற்கு சூடான், குராசோ நாடுகளிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதான புவியரசியல் மாற்றங்களினாலும் செர்பிய மொண்டெனேகுரோவிலிருந்து (தற்போதைய கொசோவோ, மொண்டெனேகுரோ மற்றும் செர்பியா) பன்னாட்டு தடைகள் காரணமாகவும் இந்தியா, குவைத்தின் தேசிய ஒலிம்பிக் குழு இடைநீக்கம் செய்யப்பட்டமையாலும் சார்பற்ற ஒலிம்பியர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 1992இலும் 2016இலும் பதக்கங்கள் வென்றுள்ளனர்; இருமுறையும் சுடுதல் போட்டியில் வென்றனர்.

இந்த சார்பற்ற ஒலிம்பியன்களுக்காக பெயரிடல் மற்றும் நாட்டுக் குறியீடு மரபுகள் சீர்மைப்படுத்தப்படவில்லை.

1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள்[தொகு]

1992 ஒலிம்பிக் போட்டிகளின் போது செர்பியாவும் மொண்டெனேகுரோவும் மற்றும் மாக்கடோனியக் குடியரசு நாட்டு மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் பங்கேற்பாளர்களாகப் போட்டியிட்டனர். மாக்கடோனியாவில் அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழு உருவாகாத காரணத்தாலும் யூகோசுலாவியா கூட்டாட்சிக் குடியரசு (செர்பியா & மொண்டெனேகுரோ) ஐக்கிய நாடுகள் அவையால் தடை செய்யப்பட்டிருந்ததாலும் இந்நாட்டு விளையாட்டாளர்கள் இவ்வாறு ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். இருப்பினும் தனிநபர் யூகோசுலாவிய மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 58 மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாகப் பங்கேற்று மூன்று பதக்கங்களை வென்றனர். 16 மெய்வல்லுநர்கள் 1992ஆம் ஆண்டு கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கில் சார்பற்ற மாற்றுத் திறனாளர் போட்டியாளர்களாகப் பங்கேற்று எட்டு பதக்கங்களை வென்றனர்.

பதக்கம் பெயர் தேசியம்[n 1] ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள்
3Silver medal icon.svg வெள்ளி யசுனா செகாரிக்  யுகோசுலாவியா  எசுப்பானியா பார்செலோனா 1992 சுடுதல் பெண்கள் 10 மீ காற்று கைத்துப்பாக்கி
3Bronze medal icon.svg வெண்கலம் அரங்கா பைன்டர்  யுகோசுலாவியா  எசுப்பானியா பார்செலோனா 1992 சுடுதல் பெண்கள் 10 மீ காற்றுத் துப்பாக்கி
3Bronze medal icon.svg வெண்கலம் இசுடீவன் பிளெடிகோசிக்}}  யுகோசுலாவியா  எசுப்பானியா பார்செலோனா 1992 சுடுதல் ஆண்கள் 50 மீ துப்பாக்கிக் குப்புறுத்தபடி

ஒருங்கிணைந்த அணி[தொகு]

முன்னாள் சோவியத் ஒன்றியம் ஒருங்கிணைந்த அணியாக ஒலிம்பிக் கொடியின் கீழ் 1992 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

[2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், four athletes from கிழக்குத் திமோரிலிருந்து நான்கு மெய்வல்லுநர்கள் சார்பற்ற ஒலிம்பிக் போட்டியாளர்களாக போட்டியிட்டனர்; அந்நாடு விடுதலை பெற்று மாற்றத்தைத் தழுவும் நேரத்தில் போட்டிகள் வந்தமையால் இவ்வாறாயிற்று. 2000 கோடைக்கால மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு விளையாட்டாளர்கள் சார்பற்ற மாற்றுத் திறனாளர் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

குறிப்புகள்
  1. மெய்வல்லுநரின் தேசியம் போட்டியின்போது பட்டியலிடப்படும்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Individual Olympic Athletes". Sports-Reference.com. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)