சார்க்கண்டு மக்கள் கட்சி
தோற்றம்
| சார்க்கண்டு மக்கள் கட்சி | |
|---|---|
| தலைவர் | சூர்யா சிங் பெசுரா |
| நிறுவனர் | இராம் தயாள் முண்டா |
| தொடக்கம் | 30 திசம்பர் 1991 |
| கொள்கை | மாநில மேம்பாடு |
| ECI status | அங்கிகரிக்கப்படா கட்சி |
சார்க்கண்டு மக்கள் கட்சி (Jharkhand People's Party) என்பது இந்தியாவில் செயல்படும் ஒரு மாநிலஅரசியல் கட்சி ஆகும். இது தீவிர அனைத்து சார்க்கண்ட் மாணவர் சங்கத்தால் 30 திசம்பர் 1991 அன்று ராஞ்சியில் நடந்த ஒரு மாநாட்டில் இராம் தயாள் முண்டா தலைமையில் தொடங்கப்பட்டது. அனைத்து சார்க்கண்டு மாணவர் சங்கம் 22 சூன் 1986 அன்று நிறுவப்பட்டது. 1994இல் இராம் தயாள் முண்டா தலைவராகவும், சூர்யா சிங் பெசுரா பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2]
பின்னர், இக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. சூர்யா சிங் பெசுரா தலைமையிலான பிரிவு சார்க்கண்ட் மக்கள் கட்சி என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில் சுதேஷ் மக்தோ தலைமையிலான பிரிவு தாய் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியது.