உள்ளடக்கத்துக்குச் செல்

சார்க்கண்டு திசோம் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்க்கண்டு திசோம் கட்சி
சுருக்கக்குறிJDP
நிறுவனர்சல்கன் முர்மு
தொடக்கம்2002
கலைப்பு18 ஆகத்து 2014 (12 ஆண்டுகள் முன்னர்) (2014-08-18)
கொள்கைபிராந்தியவாதம்
ECI statusஅங்கீகரிக்கப்படாத கட்சி
Allianceஜார்கண்ட் முன்னணி (2003)

சார்க்கண்டு திசோம் கட்சி (Jharkhand Disom Party) என்பது பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரான சல்கன் முர்மு என்பவரால் 2002-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் ஓர் அரசியல் கட்சியாகும். வரலாற்று ரீதியாக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட ஆதிவாசி மக்களின் கல்வியிலும் வேலையுறுதியிலும் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட அவர்களின் உரிமைகளுக்காக இக்கட்சி இயங்கியது.

2003-ஆம் ஆண்டில், சார்க்கண்ட் திசோம் கட்சி, சார்க்கண்டு மக்கள் கட்சி, சார்க்கண்டு கட்சி (நரேன்), சார்க்கண்டு கட்சி (கோரோ), சார்க்கண்ட் விகாசு தளம் ஆகிய பிற நான்கு கட்சிகளுடன் இணைந்து 'சார்க்கண்டு முன்னணி' என்ற கூட்டணியைத் தொடங்கியது.

2004 மக்களவைத் தேர்தலில், இக்கட்சி மேற்கு வங்காளத்தில் இருந்து நான்கு வேட்பாளர்களையும், பீகாரில் இருந்து இரண்டு வேட்பாளர்களையும், சார்க்கண்டிலிருந்து ஒரு வேட்பாளரையும் களமிறக்கியது.

சார்க்கண்ட் திசோம் கட்சி, மகாராஷ்டிராவில் வட இந்தியாவினருக்கு எதிராக ராஜ் தாக்கரேவின் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவளித்தது.[1]

2014 ஆகத்தில், சார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சர் அர்ஜுன் முண்டா முன்னிலையில் சல்கன் முர்மு தமது சார்க்கண்டு திசோம் கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார்.[2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "JDP supports Raj Thackeray". The Hindu. February 6, 2008. http://www.hindu.com/thehindu/holnus/002200802061762.htm.
  2. ↑ Jharkhand Disom Party merges with BJP
  3. ↑ "Salkhan Murmu merges JDP into BJP". Archived from the original on 30 September 2019. Retrieved 4 June 2016.
  4. ↑ Jharkhand Disom Party merges with BJP
  5. ↑ Jharkhand Vikas Morcha to merge with BJP on August 20

வெளியிணைப்புகள்

[தொகு]