சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா | |
---|---|
![]() | |
பிறப்பு | கே.அறிவழகன் திசம்பர் 18, 1953 நாகூர், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, ![]() |
புனைபெயர் | சாரு நிவேதிதா |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஸீரோ டிகிரி, ராஸ லீலா, புதிய எக்ஸைல் |
துணைவர் | அவந்திகா |
இணையதளம் | |
www.charuonline.com (தமிழ் வலைத்தளம்), | charunivedita.com (ஆங்கில வலைத்தளம்) |
சாரு நிவேதிதா (Charu Nivedita, பிறப்பு: 18 டிசம்பர் 1953) தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர். மிக பரந்த வாசகர் பரப்பை கொண்டவர். அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன. அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை சாரு நிவேதிதாவின் எழுத்து.
இவரது நாவல் ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு [1] 2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது[2]. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் [3][4] இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. தி இந்து தனது தீபாவளி மலரில், தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தெடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிபெயர்ப்பில் வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ் தவிர ஆங்கிலத்திலும் உலக அளவில் இவரது எழுத்துக்கு வாசகர்கள் உண்டு.
புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது படைப்புகளுள் முக்கியமானவை.
இவரின் 'நான் தான் ஔரங்ஸேப்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல், 2024ம் ஆண்டிற்கான க்ராஸ் வோர்டு விருதினை வென்றது.
தமிழ் படைப்புகள்
[தொகு]நாவல்
[தொகு]- எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்[5]
- ஸீரோ டிகிரி
- ராஸ லீலா
- காமரூப கதைகள்
- தேகம்
- எக்ஸைல்
- நான் தான் ஔரங்ஸேப்
- பெட்டியோ
சிறுகதைத்தொகுப்பு
[தொகு]- கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் - நாகார்ச்சுனன் மற்றும் சில்வியா (எம்.டி.முத்துக்குமாரசாமி) கதைகளுடன் வந்த தொகுதி
- நேநோ
- மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
- ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
- கடல் கன்னி (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
- ஊரின் மிக அழகான பெண் (மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
- மார்க் கீப்பர் (Morgue Keeper ) - கிண்டிலில் வெளியான ஆங்கில சிறுகதைகள்
- முத்துக்கள் பத்து - தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
- டயபாலிக்கலி யுவர்ஸ் (Diabolically Yours) - எக்ஸாட்டிக் காத்திக் தொகுதி 5, பகுதி 2-இல் வந்த சிறுகதை (Exotic Gothic 5, Vol. II)
கட்டுரைத் தொகுப்பு
[தொகு]- கட்டுரைத் தொகுப்பு
- கோணல் பக்கங்கள் - பாகம் 1
- கோணல் பக்கங்கள் - பாகம் 2
- கோணல் பக்கங்கள் - பாகம் 3
- திசை அறியும் பறவைகள்
- வரம்பு மீறிய பிரதிகள்
- தப்புத் தாளங்கள்
- தாந்தேயின் சிறுத்தை
- மூடுபனிச் சாலை
- எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது
- கடவுளும் நானும்
- வாழ்வது எப்படி?
- மலாவி என்றொரு தேசம்
- கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்
- கெட்ட வார்த்தை
- கடவுளும் சைத்தானும்
- கலையும் காமமும்
- சரசம் சல்லாபம் சாமியார்
- மனம் கொத்திப் பறவை
- கடைசிப் பக்கங்கள்
- வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள்
- பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 1
- பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 2
23. பழுப்பு நிறப் பக்கங்கள் - பாகம் 3
நாடகம்
[தொகு]- ரெண்டாம் ஆட்டம்
சினிமா விமர்சனம்
[தொகு]- லத்தீன் அமெரிக்க சினிமா: ஒரு அறிமுகம்
- தீராக்காதலி
- கலகம் காதல் இசை
- சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்
- சினிமா சினிமா
- நரகத்திலிருந்து ஒரு குரல்
- கனவுகளின் நடனம்
அரசியல் கட்டுரைகள்
[தொகு]- அஸாதி அஸாதி அஸாதி
- அதிகாரம் அமைதி சுதந்திரம்
- எங்கே உன் கடவுள்?
நேர்காணல்கள்
[தொகு]- ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
- இச்சைகளின் இருள்வெளி ('பாலியல் - நளினி ஜமீலாவுடன் ஒரு உரையாடல்' புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு)
கேள்வி பதில்
[தொகு]- அருகில் வராதே
- அறம் பொருள் இன்பம்
ஆங்கில நூல்கள்
[தொகு]- Zero Degree (ஜீரோ டிகிரி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு)
- Marginal Man (எக்ஸைல் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு)
- To Byzantium: A Turkey Travelogue
- Unfaithfully Yours (கட்டுரைத்தொகுப்பு)
- Morgue Keeper (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)
- Towards a Third Cinema (லத்தீன் அமெரிக்க சினிமாக்கள் குறித்த கட்டுரைத்தொகுப்பு)
- Conversations With Aurangzeb (நான் தான் ஔரங்ஸேப் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு)
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
[தொகு]நூல்கள் | ஆண்டு | விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் | அளித்தவர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
இந்த பத்தாண்டுகளில் சிறந்த பத்து இந்தியர்கள்(2001) | தி எகனாமிக் டைம்ஸ்
(The Economic Times) |
|||
2014 | மனதில் புதைந்த முகங்கள் 25 | தி ஹிந்து
(தீபாவளி சிறப்பு மலர்) |
தமிழகத்தின் தலைசிறந்த 25 ஆளுமைகள் | |
2019 | கண்ணதாசன் விருது | |||
2022 | விஷ்ணுபுரம் விருது[6] | விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் | ||
ஜீரோ டிகிரி | 2013 | ஜான் மிக்கல்ஷ்கி விருது[7][8]
(Jan Michalski Prize) |
2013ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது | |
2013 | 50 எழுத்தாளர்கள், 50 புத்தகங்கள் -
சிறந்த இந்திய புதினங்கள் |
ஹாப்பர் காலின்ஸ் (HarperCollins) பதிப்பகம் வெளியீடு | சிறந்த 50 நூல்களில் ஸீரோ டிகிரியும் இடம்பெற்றுள்ளது. | |
2014 | முக்கியமான புதினம் | தி சண்டே கார்டியன்
(The Sunday Guardian) |
உருவகப்படுத்துதல் வகை நூல்களில் முக்கியமானதாக கருதப்பட்டது. | |
2017 | 15க்கும் குறைவான ஆகச்சிறந்த இந்திய புதினங்கள் | மென்எக்ஸ்பீ.காம்
(Mensxp.com) |
||
நான் தான் ஔரங்ஸேப் | 2021 | சிறந்த நாவல் | வாசகசாலை அமைப்பு | |
நான் தான் ஔரங்ஸேப்
(ஆங்கில மொழிபெயர்ப்பு) |
2024 | வாசகர்களின் நாயக எழுத்தாளர் | க்ராஸ்வோட்டு | (Conversations With Aurangzeb) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.fondation-janmichalski.com/wp-content/uploads/2013/07/Synthese_Charu-Nivedita_engl.pdf
- ↑ "சிறந்த இந்திய நாவல்கள் - தி ஹிந்து". 2013-07-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
- ↑ http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=ETM/2010/12/31/7/Img/Pg007.png[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ப்ளாக், கிராபியென். "`பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான் - சாரு நிவேதிதா #LetsRelieveStress". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
- ↑ "விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகள் - சாரு நிவேதிதா". தி ஹிந்து. 2022.
- ↑ "Edition 2013 – Fondation Jan Michalski". www.fondation-janmichalski.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-19.
- ↑ "Wayback Machine" (PDF). www.fondation-janmichalski.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-19.