சாருல் மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாருல் மாலிக்
படிமம்:Charul Malik (2011-11-20).jpg
2011இல் சாருல் மாலிக்
குடியுரிமைஇந்தியர்
பெற்றோர்ஜி. எஸ். மாலிக் (தந்தை)
ஆஷா மாலிக் (தாயார்)

சாருல் மாலிக் (Charul Malik) இந்தியாவைச் சேர்ந்தஓர் செய்தி தொகுப்பாளரும், ஊடகவியலாளரும் ஆவார். இவர் இப்போது இந்தியா தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராகவும் நிர்வாக ஆசிரியராகவும் சேர்ந்துள்ளார். இதற்கு முன் இவர் மும்பையின் ஆஜ் தக் தொலைக்காட்சியில் இணை ஆசிரியராகவும் தொகுப்பாளராக பணியாற்றினார்.[1] [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பரிதாபாதைச் (அரியானா) சேர்ந்த இவரது பெற்றோர் சண்டிகருக்கு குடிபெயர்ந்த்னர். இவரது தந்தை ஜி. எஸ். மாலிக் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக இருந்தார். இவரது தாயார் ஆஷா மாலிக், சண்டிகரில் ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு பருல் என்ற இரட்டை சகோதரியும் கௌரவ் மாலிக் என்ற ஒரு தம்பியும் உள்ளனர்.[4]

தனது ஆரம்பக்கல்விக்குப் பிறகு சட்டப் பட்டம் பெற்றார். நடப்பு விவகாரங்களுக்கான படிப்புக்கு இவர் சேர விரும்பினார். எனவே ஒரு வழக்கறிஞரான இவரது தந்தை, இவரை சட்டக் கல்லூரியில் சேர அறிவுறுத்தினார்.

சாருல் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை தனது குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்த்துக் கழித்ததாகக் கூறினார். அந்த நாட்களில், தூர்தர்ஷன் மட்டுமே தொலைக்காட்சி சேனலாக இருந்தது, சல்மா சுல்தான் மற்றும் நளினி சிங் அவரது முன்மாதிரியாக இருந்தனர்.

தொழில்[தொகு]

சாருல் மாலிக் ஒரு நேர்காணல் மூலம் ஜெயின் தொலைக்காட்சியின் செய்தி தொலைக்காட்சியில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், விரிவடைந்துவரும் துறையில் சிறந்த செய்தி வாசகர்களில் ஒருவராக மாறினார். புகழ்பெற்ற தொலைக்காட்சி பிரபலங்களான பிரனாய் ராய் , வினோத் துவா ஆகியோர் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இவரது சிறந்த பேச்சின் மூலம் இவரை பாராட்டியுள்ளனர். "அவர்களின் பாராட்டுக்கள் எனக்கு அதிக நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஊட்டியது" என்கிறார்.

சாருல் ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சியில் (இப்போது ஏபிபி நியூஸ்) சேர்வதற்கு முன்பு சஹாரா சமே தொலைக்காட்சியில் பணிபுரிந்தார். அதில் இவர் 2006 முதல் தொடர்ந்து செய்திகளை வழங்கி முன்னணி அறிவிப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.[5] [6]

சாருலுக்கு பத்திரிக்கை மற்றும் செய்தி தொகுப்பில் 16 ஆண்டுகளுக்கும் மேலான பரந்த அனுபவம் உள்ளது. அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, வியாபாரம் போன்ற அனைத்துப் பொருள்களையும் கையாளும் இவர் பல பேச்சு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும், பல்வேறு தரப்பு மக்களையும் பேட்டி எடுத்தார்.

விருதுகளும் அங்கீகாரமும்[தொகு]

சறுக்கிக் கொண்டே நேரடி நேர்காணலை நடத்திய உலகின் ஒரே செய்தியாளராக சாருல் மட்டுமே இருந்தார். மேலும் இது லிம்கா சாதனைகள் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[7]

சாருலுக்கு சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி விருது 2014இல் "சிறந்த பொழுதுபோக்கு செய்தி தொகுப்பாளர் " விருது வழங்கப்பட்டது. [8]

2014/15 ஆம் ஆண்டிற்கான சிறந்த பொழுதுபோக்கு செய்தி தொகுப்பாளருக்கான மை சிட்டி விருதையும் சாருல் வென்றார். [9]

சாருல் ஆசிய பார்வையாளர்கள் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த தொகுப்பாளராகவும் பரிந்துரைக்கப்பட்டார். இதில் இவர் இறுதி சுற்றில் என்டிடிவி 24x7யின் பர்கா தத்திடம் தோல்வியடைந்தார்.[10]

சாருல் பத்திரிகை மற்றும் செய்தி வாசிப்புத் துறையில் சாதித்ததற்காக பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவர் சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த பொழுதுபோக்குத் தொகுப்பாளராக இருந்தார்.

சாருல் பாபிஜி கர் பர் ஹாய் போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு நடிகையாக அனைவராலும் பாராட்டப்பட்டார்.[11]

சான்றுகள்[தொகு]

 1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 23 March 2013 அன்று பரணிடப்பட்டது.
 2. "clasificar minerales clasificador de tornillo para metales,funda para molino de bolas peru". மூல முகவரியிலிருந்து 26 May 2015 அன்று பரணிடப்பட்டது.
 3. "Journalism: A New Story Every Time" (2 March 2015). மூல முகவரியிலிருந்து 3 March 2012 அன்று பரணிடப்பட்டது.
 4. "The Tribune...Arts Tribune" (1 December 1999).
 5. "The Tribune, Chandigarh, India – Editorial".
 6. "The Tribune, Chandigarh, India – Chandigarh Stories" (1 July 2000).
 7. "Coca-Cola Global: Soft Drinks & Beverage Products". Limcabookofrecords.in. மூல முகவரியிலிருந்து 30 June 2013 அன்று பரணிடப்பட்டது.
 8. "aajtak wins 6 awards in news television awards: ख़बरें: आज तक". Aajtak.intoday.in (2 June 2014).
 9. "Popular Anchor Charul Malik honored with Best Entertainment News Anchor Award – First Report.in : Latest News, Fashion News, Events News, India News". First Report.in (2 April 2015).
 10. "clasificar minerales clasificador de tornillo para metales,funda para molino de bolas peru". Mediakhabar.in. மூல முகவரியிலிருந்து 4 March 2016 அன்று பரணிடப்பட்டது.
 11. "Charul Malik makes appearance in Bhabhiji Ghar Par Hai! – indiatv.com: Latest News, Fashion News, Events News, India News". First Report.in (20 Feb 2018).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருல்_மாலிக்&oldid=3295006" இருந்து மீள்விக்கப்பட்டது