சாருசீதா சக்கரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாருசீதா சக்கரவர்த்தி
Charusita Chakravarty
பிறப்புமே 5, 1964 (1964-05-05) (அகவை 56)
கேம்பிரிட்ச், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
வாழிடம்புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
துறைவேதியியல், வேதி இயற்பியல், கோட்பாட்டு, கணிப்பு வேதியியல்
பணியிடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
கல்வி கற்ற இடங்கள்தில்லி பல்கலைக்கழகம், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பேரா. டி. சி. கிளேரி
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (2009)

சாருசீதா சக்கரவர்த்தி (Charusita Chakravarty) ஓர் இந்தியக் கல்வியியலாளரும் அறிவியலாளரும் ஆவார். இவர் 1999 இல் இருந்து தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் வேதியியல் பேராசிரியராக உள்ளார். இவர் 2009 இல் வேதியியலுக்காக சாந்தி சுவரூப் பட்நாகர் அறிவியல் தொழில்நுட்ப விருதைப் பெற்றார். இவர் 1999 இல் பி. எம். பிர்லா அறிவியல் விருதைப் பெற்றுள்ளார்.[1][2] இவர் பங்களூருவில் உள்ள உயர் அறிவியல் ஆராய்ச்சிக்கான சவகர்லால் நேரு மையத்தின் பொருள் அறிவியல் கணிப்பு மையத்தின் இணை உறுப்பினர் ஆவார்.[3]

ஆய்வுப் புலங்கள்[தொகு]

சாருசீதா பின்வரும் அறிவியல் தொழில்நுட்பப் புலங்களில் பணிபுரிகிறார்:[2]

கல்வியும் சொந்த வாழ்க்கையும்[தொகு]

சக்கரவர்த்தி அமெரிக்காவில் உள்ள மசாசூசட்டில் கேம்பிரிட்ஜில் பிறந்தார். இவர் இளம் வேதியியல் பட்டத்தை தில்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த புனித இசுட்டீபன் கல்லூரியில் பெற்றார். பின்னர் இவர் தன் இயற்கை முப்புலப் படிப்பைப் படிக்க இரண்டு ஆண்டுகள் கேம்பிரிட்ஜுக்குச் சென்றார். இவர் டேவிட் கிளேரியின் கீழ் குவையச் சிதறலிலும் கதிநிரலியலிலும் முனைவர் பட்ட்த்தைக் கேம்பிரிட்ஜில் முடித்தார்.

விருதுகள்[தொகு]

  • சாந்தி சுவரூப் பட்நாகர் அறிவியல் தொழில்நுட்பப் பரிசு (2009)[4]
  • பி. எம். பிர்லா அறிவியல் விருது (1999)[5]
  • இளம் அறிவியலாளருக்கான இந்தியத் தேசிய அறிவியல் கல்விக்கழகப் பதக்கம் (1996)[6]
  • இந்தியத் தேசிய அறிவியல் கல்விக்கழக அனில்குமார் போசு நினைவு விருது (1999)[6]
  • பங்களூரு இந்தியத் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் (2006)[7]
  • இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை உறுப்பினர் (2004)[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]