உள்ளடக்கத்துக்குச் செல்

சாரா ஹாரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sarah Harrison 2013

சாரா ஹாரிசன் (ஆங்கிலம்: Sarah Harrison )[1] என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்[1]. அவர் தற்போது‍ விக்கிலீ்க்ஸ்-ன் சட்ட பாதுகாப்பு குழுவில் உள்ளார். இந்த சட்ட பாதுகாப்புக்குழு‍ ஸ்பெயினின் முன்னாள் நீதிபதி பால்ட்சர் கார்சன் தலைமையில் இயங்கி வருகிறது.

சாரா ஹாரிசன் தற்போது‍ முக்கியமான புலனாய்வு செயற்திட்டங்கள், அதாவது‍ வெளிப்படுத்தப்பட்ட தீவிர மனித உரிமை மீறல்கள் மற்றும் உலகளாவிய கண்காணிப்பு துறையின் அம்சங்கள் கொண்ட பிரிவில் ஆசிரியர் மற்றும் துப்பறியும் இதழியல் குழுவுக்கான புலனாய்வு ஆராய்ச்சியாளர் ( The Bureau of Investigative Journalism ).

சாரா ஹாரிசன் ஜூலியல் அசாஞ்சே வால் ஆப்கன் வார் லாக் ( Afghan war logs )[2] என்ற பதி்ப்புக்கு‍ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது‍ எட்வர்ட் ஸ்நோடனுடன் ஜனநாயக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஸ்னோடனின் அடைக்கலத்திற்கு‍

[தொகு]

ஸ்னோடென் சார்பில் கோரிக்கை மனுக்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் சட்ட ஆலோசகர் சாரா ஹாரிசன் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிடம் ஸ்னோடென் அடைக்கலம் கோரியுள்ளார். ஆஸ்திரியா, பொலிவியா, பிரேஸில், சீனா, கியூபா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, நெதர்லாந்து, நிகராகுவா, நார்வே, போலந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, வெனிசூலா ஆகிய நாடுகளிடம் சமர்ப்பித்துள்ளார்[3].

மூலம்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sarah Harrison
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_ஹாரிசன்&oldid=2714595" இலிருந்து மீள்விக்கப்பட்டது