சாரா சுலேரி குட்இயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாரா சுலேரி குட்இயர் (Sara Suleri Goodyear) (பிறப்பு ஜூன் 12, 1953), சாரா சுலேரி என்பவர் பாக்கித்தானில் பிறந்த யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் மற்றும் அமெரிக்க எழுத்தாளர் ஆவார்.[1] அங்கு விக்டோரியா கால கவிதைகள் பிரிவுகளை கற்பிக்கும் பணியினை மேற்கொண்டு வந்தார். இவர் யேல் ஜர்னல் ஆஃப் கிரிடிசிசத்தின் நிறுவன ஆசிரியராக இருந்தார், மேலும் ஒய்.ஜே.சி, தி யேல் ரிவியூ மற்றும் டிரான்ஸிஷன் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சுலேரி பாக்கித்தானில் 1953 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தாய் மைர் ஜோன்ஸ் வெல்ஷ் மரபினைச் சார்ந்தவர் ஆவார். இவர் ஆங்கில பேராசிரியராக பணியாற்றினார். அவரது தந்தை இசட். ஏ. சுலேரி பாக்கித்தானை மரபாகக் கொண்டவர். இவர் அங்குள்ள குறிப்பிடத் தகுந்த அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படுகிறார். இவரின் பெற்றோருக்கு ஆறு குழந்தைகள். இவரின் தந்தை பாக்கிஸ்தானில் அச்சு பத்திரிகையின் முன்னோடியாகக் கருதப்பட்டார். மேலும் இந்திய துணைக் கண்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாம் பற்றிய பல்வேறு வரலாறு மற்றும் அரசியல் நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இவர் லண்டனில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார் மற்றும் லாகூரில் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியினைப் பயின்றார். 1974 ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள கின்னைர்ட் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படத்தினை பெற்றார். மேலும் 1983 இல் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.

தொழில் மற்றும் முக்கிய படைப்புகள்[தொகு]

மாசசூசெட்ஸின் வில்லியம்ஸ்டவுனில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரியில் சுலேரி இரண்டு ஆண்டுகள் கல்வி கற்பித்தார். இவர் யேல் பல்கலைகழகத்திற்குச் சென்று 1983 ஆம் ஆண்டு முதல் கல்வி கற்பிக்கத் துவங்கினார்.[2] இவர் யேல் ஜர்னல் ஆஃப் கிரிடிசிசத்தின் நிறுவன ஆசிரியராக இருந்தார், மேலும் ஒய்.ஜே.சி, தி யேல் ரிவியூ மற்றும் டிரான்ஸிஷன் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். இவர் 1992 ஆம் ஆண்டில் ஆங்கில இந்தியாவின் சொல்லாட்சி (தெ ரெட்டோரிக் ஆஃப் இங்கிலிஷ் இண்டியா) நூலினை எழுதினார். இந்த நூல் தி யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இந்த நூல் விமர்சகர்களால் பாராட்டினைப் பெற்றது.

வெளியிடப்பட்ட படைப்புகள்[தொகு]

1989 ஆம் ஆண்டில் மீட்லஸ் டேய்ஸ் எனும் நூலினை எழுதினார். இந்த நூல் தி யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. பின்பு இரண்டாவது நூலாக 1992 ஆம் ஆண்டில் ஆங்கில இந்தியாவின் சொல்லாட்சி (தெ ரெட்டோரிக் ஆஃப் இங்கிலிஷ் இண்டியா) நூலினை எழுதினார். இந்த நூல் தி யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.பின்பு 2003 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது நூலான பாய்ஸ் வில் பி பாய்ஸ் எ டாட்டர்ஸ் எல்ஜி எனும் நூலினை எழுதினார். இந்த நூல் தி யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோ பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1993 ஆம் ஆண்டில் சுலேரி, குட்இயர் குடும்பத்தைச் சேர்ந்த ஆஸ்டின் குட்இயரை (1923-2008) மணந்தார்.[3] குட்இயருக்கு லூயிசா ராபின்ஸுடன் 1920 ஆம் ஆண்டில் முதல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன,[4] இவரின் முதல் மனைவி தாமஸ் ராபின்ஸ் ஜூனியரின் பேத்தி ஆவார்.

2008 ஆம் ஆண்டில் இவர் இறக்கும் வரை சுலேரியும் குட்இயரும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_சுலேரி_குட்இயர்&oldid=2867957" இருந்து மீள்விக்கப்பட்டது