உள்ளடக்கத்துக்குச் செல்

சாரா குறைசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா குறைசி
Sara Quraishi
தாய்மொழியில் பெயர்سارہ قریشی
பிறப்புஇசுலாமாபாத்து
தேசியம்பாக்கித்தானியர்
கல்விஇயந்திரப் பொறியியல், விண்வெளிப் பொறியியல்
படித்த கல்வி நிறுவனங்கள்பாக்கித்தான் தேசியா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கிரான்பீல்டு பல்கலைக்கழகம்
பணிவிண்வெளிப் பொறியியல்

சாரா குறைசி ( உருது: سارہ قریشی‎ ) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒர்ரு விண்வெளி பொறியாளர் ஆவார். சுற்றுச்சூழல் நட்பு வகை விமான இயந்திரங்களில் கவனம் செலுத்தும் பாக்கித்தானின் முதல் தனியார் விமான நிறுவனமான வான் இயந்திர கைவினை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் பணிபுரிகிறார்.[1] [2] உலகின் முதலாவது சுற்றுச்சூழல் நட்பு இயந்திரத்தை சாரா குறைசி வடிவமைத்துள்ளார். [3] [4]

பின்னணி[தொகு]

குறைசி பாக்கித்தான் நாட்டின் இசுலாமாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை நாட்டின் ஒரு முக்கியமான விஞ்ஞானியாவார். தாயாரும் குவாண்டம் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார். [5] சிறுவயதிலிருந்தே குறைசி விமானப் போக்குவரத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை விமானத் துறையில் பணிபுரிந்தார் என்பதால் குறைசி தனது தந்தையுடன் இயந்திரங்கள் மற்றும் இயந்திரப் பொறிகளில் பணிபுரிந்தார். இயந்திரங்களில் இவரது ஆரம்பகால வெளிப்பாடு, குறைசியின் ஆர்வத்தைத் தூண்டியது. வாகனத் துறையில் இவரது உள்ளிருப்புப் பயிற்சி அனுபவமும் குறைசியை ஊக்குவிக்கும் காரணியாக அமைந்தது. [6] [7] பாக்கித்தான் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் குறைசி இயந்திரப் பொறியியலில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் விண்வெளி இயக்கவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் கிரான்பீல்டு பல்கலைக்கழகத்தில் இருந்து விண்வெளி உந்துதலில் [8] [9] முனைவர் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பிறகு, குறைசி பறக்கவும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். விரைவில் இவர் தனது தனிப்பட்ட விமான ஓட்டி உரிமத்தைப் பெற்றார். கிரான்ஃபீல்டில் இருந்த காலத்தில், குறைசி அக்ரோபாட்டிக் பறப்பையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். [10] [11] இவருக்கு 70 மணிநேர பறக்கும் அனுபவமும் உள்ளது. [12]

வேலை[தொகு]

இளநிலை பட்டம் பெற்ற பிறகு, குறைசி பாக்கிதானின் வாகனத் தொழிலில் வேலை செய்யத் தொடங்கினார். [13] ஆளில்லா வான்வழி வாகனங்கள் வடிவமைப்பதில் தொடர்பைக் கொண்டிருந்தன. வடிவமைப்பு ஆய்வு முனைவர் பட்டத்தின் போது குறைசி முதுநிலை மாணவர்களை அதிவேக விமான இயந்திரத் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி திட்டங்களை மேற்பார்வையிட்டார். [14] [15]

குறைசி தனது தந்தையும் ஒரு முக்கிய இயற்பியலாளர் மற்றும் விஞ்ஞானியுமான மசூத் லத்தீப் குரேசியுடன் இணைந்து , விமானங்களுக்கான சுற்றுச்சூழல் நட்பு இயந்திரங்களை உருவாக்க ஏரோ இயந்திர கைவினை நிறுவனத்தை நிறுவினார். [16] புவி வெப்பமடைதலை எதிர்கொள்ள , குறைக்கப்பட்ட கார்பன் தடம் சேர்க்கப்பட்ட கூடுதல் அம்சங்களுடன் ஒரு செயற்கை ஒடுக்கக் குறைபாடு இல்லாத ஏரோ-இயந்திரத்தை வடிவமைத்தார். [17] [18]

குறைசியின் இயந்திர வடிவமைப்பு ஒரு தனித்துவமான அழுத்தம் அடிப்படையிலான ஒடுக்க அமைப்பைக் கொண்டிருக்கும், இது விமானத்தின் வெளியேற்றப் பகௌதியில் உள்ள நீராவியை குளிர்விக்கும். [19] [20] இந்த நீர் விமானத்தில் இருக்கும் மற்றும் தேவைக்கேற்ப மழையாக வெளியிடப்படும். [21] [22] " நாங்கள் ஒரு இயந்திரத்தை தயாரித்தோம், பின்னர் அதை ஒடுக்கம் இல்லாத ஏரோ-இயந்திரமாக மாற்றுவதற்கு ஒடுக்க அமைப்பை இணைத்தோம்" என்று குறைசி கூறினார். அடுத்த கட்டமாக இது ஒரு விமானத்தில் பொருத்தப்பட்டு சோதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். [23] [24]

குறைசி இந்த தொழில்நுட்பத்தை கிரான்ஃபீல்டில் முனைவர் படிப்பின் போது 2018 ஆம் ஆண்டில் தனது ஆய்வறிக்கையின் ஒரு பகுதியாக உருவாக்கத் தொடங்கினார். இப்போது தனது பேராசிரியருடன் தொடர்ந்து ஒத்துழைக்கிறார். [25] [26]

தனது திட்டம் இரண்டு சர்வதேச காப்புரிமைகளை வென்றுள்ளது என்றும் அது வணிக ரீதியாக கிடைப்பதற்கு குறைந்தது ஆறு ஆண்டுகள் ஆகும் என்றும் மனம் திறக்கிறார். [27] [28] நாட்டின் தனியார் துறை முதன்முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சியை எடுத்துள்ளது. இது புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டத்தில் பாக்கித்தானின் பங்கை உலகளவில் எடுத்துக்காட்டும். [29] [30] இவருடைய கண்டுபிடிப்பு விமானத் துறையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றும் குறைசி நம்புகிறார். [31] [32]

விருதுகள்[தொகு]

பாக்கித்தானில் நடந்த இங்கிலாந்து இராச்சிய முன்னாள் மாணவர் விருதுகளில் பன்னிரண்டு பேரில் ஒருவராக குறைசி அறிவிக்கப்பட்டார். தொழிலதிபர் விருதுக்கும் குறைசியின் பெயர் அறிவிக்கப்பட்டது. விருதுகள் இங்கிலாந்தின் உயர்கல்வி மற்றும் உலகளவில் இங்கிலாந்தின் முன்னாள் மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடுகின்றன. இறுதித் தேர்வாளர்கள் தங்கள் துறையில் சிறப்பான சாதனைகள் மற்றும் இங்கிலாந்து மற்றும் பாக்கித்தானுக்கு இடையேயான ஒத்துழைப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பை அங்கீகரித்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். [33] [34]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Pakistani Scientist Unveils World's First Eco-Friendly Aircraft Engine". RS News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-26. Archived from the original on 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 2. I, Farah. "This Muslimah Scientist Invented Artificial Rain From Aircraft Vapor Trails To Combat Global Warming". Halalop (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 3. "Dr Sarah Qureshi Archives". Naya Daur (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 4. "Mar 12, 2020 | Engineer`s contribution to reducing pollution lauded". Dawn Epaper (in ஆங்கிலம்). 2020-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 5. admin. "Short Profile of Mr. Masood Latif Qureshi; Founder and Chief Technology Officer at Aero Engine Craft (Pvt) Ltd – PAeC" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 6. Release -, Press. "dr sarah qureshi". WhenWhereHow Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 7. "Dr. Sarah Qureshi | Brandsynario" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 8. "Sarah Qureshi". Pakpedia | Pakistan's Biggest Online Encyclopedia (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-14. Archived from the original on 2020-11-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 9. "Senate science panel concerned over slow release of funds". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 10. "Dr. Sarah Qureshi On the Brink of An Aerospace Marvel". NICLahore (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-27. Archived from the original on 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 11. "Pakistani engineer develops environment-friendly aeroplane engine". The Current (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 12. "Sarah Qureshi Developing Pollution free Aircraft Engine". Pakistan Defence (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 13. "NUST Alumna Builds Worlds First Eco-friendly Aircraft Engine". UrduPoint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 14. "Pakistani scientist set to unveil world's first eco-friendly aircraft engine". Arab News PK (in ஆங்கிலம்). 2020-02-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 15. "Dr. Sarah Qureshi develops an Aerospace marvel". Dr. Sarah Qureshi develops an Aerospace marvel. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 16. admin (2020-02-11). "Dr. Sarah Qureshi Developed Pollution Free Airplanes Engine". Pakistan construction and quarry (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 17. "Team". AeroEngineCraft (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 18. "Dr. Sarah Qureshi – while everyone focuses on saving the world, she's saving the skies!". Girls.Pk. 2020-02-08. Archived from the original on 2020-12-08. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 19. "Pakistani inventing world's first environment-friendly aircraft engine". MIT Technology Review Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-10. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 20. A, Danial (2020-02-26). "Pakistani Engineer Dr. Sarah Builds World's First Eco-Friendly Aircraft Engine!". Parhlo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 21. "Dr. Sarah Qureshi develops an Aerospace marvel". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 22. "Sarah Qureshi, Aerospace Engineer Built Airplane Engine That Can Produce Rain". The Islamic Information (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 23. "Pakistani aerospace engineer aims to make air travel sustainable". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 24. ""We have a Revolutionary idea that could change the way the aviation industry works", Dr. Sarah Qureshi, Founder & CEO, Aero Engine Craft". Oyeyeah (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-23. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 25. "Pakistani scientist invents world's first eco-friendly aircraft engine". The Express Tribune (in ஆங்கிலம்). 2020-02-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 26. "Eco-Friendly Aircraft Engine Created By Pakistani Girl; Dr Sarah Qureshi". Feliziaa (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 27. "Startup Grind Pakistan Conference 2019 | Startup Grind". www.startupgrind.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 28. admin (2020-02-27). "World's first ECO-friendly aircraft engine is invented by Pakistani scientist Sara Qureshi". All About Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-12-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 29. Ehsan, Sara (2020-02-10). "Aerospace Engineer Dr. Sarah Qureshi from Pakistan developed Pollution free engine for airplanes". Technology Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 30. admin (2020-10-22). ""We have a Revolutionary idea that could change the way the aviation industry works"Dr. Sarah Qureshi, Founder and CEO, Aero Engine Craft". News Update Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 31. "Female Pakistani aerospace engineer Dr Sarah Qureshi unveils an engineering marvel which would take aviation industry by storm". Times of Islamabad (in ஆங்கிலம்). 2019-11-21. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 32. propakistani. "Pakistani female aero-engineer".
 33. "Cranfield University Alumni | News | Dr Sarah Qureshi announced as a finalist in the Study UK Alumni Awards - Pakistan". alumni.cranfield.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
 34. "Alumni Award 2020 | British Council". www.britishcouncil.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_குறைசி&oldid=3650366" இலிருந்து மீள்விக்கப்பட்டது