உள்ளடக்கத்துக்குச் செல்

சாரதா (மலையாள இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரதா (Sharada-Malayalam women's magazine) தென்னிந்திய மாநிலமான கேரளாவில் வெளியிடப்பட்ட இரண்டாவது மலையாளப் பெண்கள் பத்திரிகையாகும்.[1] 1904 நவம்பரில் கொச்சியின் திருப்பூணித்துறையிலிருந்து வெளியிடப்பட்டது.[2] சாரதா இதழினை பி. கல்யாணி அம்மா, டி. சி. கல்யாணி அம்மா, டி. அம்முக்குட்டி அம்மா ஆகியோர் தொகுத்துள்ளனர்.[3] கேரளாவில் பெண்களால் தொகுத்து வெளியிடப்பட்ட முதல் பெண் பத்திரிகை இதுவாகும்.[4] இந்தப் பத்திரிகையின் உரிமையாளர் கே. நாராயண மேனன் ஆவார். இது பாரதி விலாசம் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

சாரதாவின் அச்சிடுதல் மூன்று ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு திருவனந்தபுரத்திலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டது. சாரதா 1908 வரை கே. இராமகிருஷ்ண பிள்ளையின் ஆதரவின் கீழ் அச்சிடப்பட்டது.[5]

ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு, 1913ஆம் ஆண்டு கல்யாணி அம்மா மற்றும் பிற பெண் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்களின் ஆசிரியர் தலைமையில் பத்திரிகை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த முறை இது 1925 வரை தொடர்ந்தது. இந்தப் பத்திரிகையை புனலூரைச் சேர்ந்த டி. கே. கல்யாணிகுட்டி அம்மா வெளியிட்டார்.[5] இது முன்னர் வெளியிடப்பட்ட சாரதாவிலிருந்து வேறுபட்டது. 1920களில் 750 வெளியீடுகளுடன் சாரதா அதன் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது.[6][7]

சாரதா சமூகப் பிரச்சினைகள், பிற தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டது. மலையாளப் பெண்களுக்குக் கல்வி கற்பித்து அவர்களின் வளர்ச்சியை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rekha, P. (2016). Women and Journalism in Colonial Kerala. Kalady: Department of History, Sree Sankaracharya University of Sanskrit. pp. 84–86.
  2. "Editorial". Sharada 1: 3. 
  3. Kumari E.K., Swarna (2001). "WOMENS' MAGAZINES IN KERALA AND THEIR SOCIAL SIGNIFICANCE". Proceedings of the Indian History Congress 62: 705–708. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44155817. 
  4. Awaya, Toshie (2003). "Becoming a 'Female Citizen' in Colonial Kerala". Gender and Modernity: Perspectives from Asia and the Pacific. Kyoto University Press and Trans Pacific Press. pp. 41–60.
  5. 5.0 5.1 Priyadarsanan, G. (2017). Masikapatanangal (in Malayalam). Kottayam: Sahithya Pravarthaka Co-operative Society Ltd. p. 80.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. The Travancore Almanac & Directory 1921. Thiruvananthapuram: Government Press. 1921.
  7. The Madras Year Book 1923 with an Official, Commercial and General Directory of the Madras Presidency. Madras: Government Press. 1923.
  8. "Women's History: An Overview of Early Malayalam Periodicals for Women". Samyukta: A Journal of Gender and Culture (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-31. Retrieved 2022-04-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_(மலையாள_இதழ்)&oldid=4207579" இலிருந்து மீள்விக்கப்பட்டது