உள்ளடக்கத்துக்குச் செல்

சாரதா பிரசாத் பதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரதா பிரதான்
Sarada Pradhan
உறுப்பினர், ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்பிரதாப் இயெனா
தொகுதிமகங்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சாரதா பிரசாத் பதன்

சூலை 27, 1978 (1978-07-27) (அகவை 47)
போதமரை, மகங்கா, ஒடிசா, இந்தியா
துணைவர்சிப்ரா பிரியதர்சினி பால்
பெற்றோர்
  • பிரச்சாபந்து பிரதான் (தந்தை)
வாழிடம்புவனேசுவரம், ஒடிசா
தொழில்அரசியல்வாதி, சமூக சேவை
புனைப்பெயர்புலு

சாரதா பிரசாத் பதன் (Sarada Prasad Padhan) என்பவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். 2024ஆம் ஆண்டு முதல் ஒடிசா சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். ஒரு சுயேச்சை வேட்பாளராக மகங்கா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2]

2014ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தல்களில், பிரதாப் இயெனாவை எதிர்த்துப் போட்டியிட்டார். முதலில் சுயேச்சையாகவும் பின்னர் பாரதிய சனதா கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டார். ஆனால் இரண்டு முறையும் தோற்கடிக்கப்பட்டார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அங்கித் பிரதாப் இயெனாவை தோற்கடித்து, சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக தனது முதல் தேர்தல் வெற்றியைப் பெற்றார்.

அரசியல்

[தொகு]

இவரின் தந்தை பிரச்சபந்து பதன், போதமரை கிராம பஞ்சாயத்தின் சர்பஞ்சாக பல முறை பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்பத்தில் மகங்காவில் பிச்சூ சனதா தளம் கட்சியில் இருந்தார். ஆனால் பிரதாப் இயெனா அப்பகுதியில் ஒரு முக்கிய அரசியல் நபராக உருவெடுத்தபோது இவர் ஓரங்கட்டப்பட்டார்.[3] கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு சுயாதீனத் தலைவராக மகங்கா விகாசு பரிசத் (எம்விபி) என்ற பெயரில் இவர் தனது சொந்த இயக்கத்தைத் தொடங்கினார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், பிரதாப் இயெனாவை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார், ஆனால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டில் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார்.[4][5][6] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு, பிரதாப் இயெனாவை மீண்டும் ஒருமுறை எதிர்கொண்டார், ஆனால் மீண்டும் தோல்வியடைந்தார்.

மத்திய அமைச்சரவை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டார். ஆனால் உள் அரசியல் இயக்கவியல் காரணமாக, 2024 தேர்தலுக்கான பாரதிய சனதா கட்சியின் பிரதிநிதியாக இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.[7] இதன் விளைவாக, ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார், அவரது முக்கிய எதிரியாக அங்கித் பிரதாப் இயெனா இருந்தார்.[8]

திருமணம்

[தொகு]

பிரதான் மார்ச் 2, 2025ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் தேதியன்று இராசத்தானின் செய்ப்பூரில் சிப்ரா பிரியதர்சினி பால் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.[9][10] இவரது மணைவி பால் ஒடிசா நிர்வாக சேவையில் பயிற்சி அதிகாரியாக உள்ளார். முன்னதாக மகங்கா மற்றும் நிசுசிந்த்கோலி தொகுதிகளில் சமூக விரிவாக்க அதிகாரியாகப் பணியாற்றினார்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mahanga Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-10-10.
  2. "Mahanga, Odisha Assembly Election Results 2024 Highlights: Independent candidate Sarada Prasad Padhan with 88632 defeats BJD's Ankit Pratap Jena". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-10-10.
  3. "No Smooth Sailing for Pratap". The New Indian Express. https://www.newindianexpress.com/states/odisha/2014/Mar/31/no-smooth-sailing-for-pratap-592907.html. 
  4. "Mahanga Development Council head Sarada Pradhan to join BJP". O TV. https://odishatv.in/odisha-news/body-slider/mahanga-development-council-head-sarada-pradhan-to-join-bjp-272619. 
  5. "माहांगा विकास परिषद का भाजपा में विलय". Jagaran. https://www.jagran.com/odisha/bhubaneshwar-fushon-to-mahanga-vikas-parishad-in-bjp-17460148.html. 
  6. "Dharmendra Pradhan leads BJP roadshow in Cuttack district". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/cuttack/dharmendra-pradhan-leads-bjp-roadshow-in-cuttack-district/articleshow/62768464.cms. 
  7. "BJP workers, independent MLA supporters brawl over meeting CM in Odisha". The New Indian Express. https://www.newindianexpress.com/states/odisha/2024/Jul/19/bjp-workers-independent-mla-supporters-brawl-over-meeting-cm-in-odisha. 
  8. "Dissident worry for BJD, BJP in Cuttack". The New Indian Express. https://www.newindianexpress.com/states/odisha/2024/May/09/dissident-worry-for-bjd-bjp-in-cuttack-2. 
  9. "Odisha's Mahanga MLA Sarada Pradhan set to tie the knot: Wedding ceremony in Rajasthan to be a grand affair". Kalinga TV. https://kalingatv.com/odisha/odishas-mahanga-mla-sarada-pradhan-set-to-tie-the-knot-wedding-ceremony-in-rajasthan-to-be-a-grand-affair. 
  10. "Odisha MLA set to tie nuptial knot; It's destination wedding in Rajasthan". Sambad English. https://sambadenglish.com/latest-news/odisha-mla-set-to-tie-nuptial-knot-its-destination-wedding-in-rajasthan-8768737. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_பிரசாத்_பதன்&oldid=4446856" இலிருந்து மீள்விக்கப்பட்டது