சாரதா பல்கலைக்கழகம்
| வகை | தனியார் பல்கலைக்கழகம் |
|---|---|
| உருவாக்கம் | 2009 |
| வேந்தர் | பிரதீப் குமார் குப்தா |
| துணை வேந்தர் | முனைவர் சிபாரம் காரா |
கல்வி பணியாளர் | 1,200+ |
| மாணவர்கள் | 17000+ |
| அமைவிடம் | , , 28°28′21″N 77°29′00″E / 28.47250°N 77.48333°E |
| வளாகம் | நகர்ப்புறம் (63 ஏக்கர்) |
| சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
| இணையதளம் | www |
சாரதா பல்கலைக்கழகம் (Sharda University) என்பது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார்ப் பல்கலைக்கழகம் ஆகும். இது 2009ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தின் சட்ட எண் 14, 2009 இன் கீழ் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) சட்டம், 1956 இன் பிரிவு 2(f) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 22(1) இன் படி பட்டங்கள் வழங்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது.இது சாரதா கல்விக் குழுமத்தின் அங்கமாகும்.[1] இது பிரதீப் குமார் குப்தா, யதீந்திர குமார் குப்தா ஆகியோரால் நிறுவப்பட்ட சாரதா கல்வி நிறுவனக் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.
இப்பல்கலைக்கழகத்தின் சகோதர வளாகங்கள் ஆக்ரா மற்றும் உசுபெக்கிசுத்தான் ஆகிய இடங்களிலும் செயல்படுகின்றன. நொய்டா பெருநகர் பகுதியில் அமைந்துள்ள இதன் வளாகம் 63 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது.
வரலாறு
[தொகு]சாரதா பல்கலைக்கழகத்தின் தோற்றம் 1996 ஆம் ஆண்டில் சாரதா கல்வி நிறுவனக் குழுமம் நிறுவப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. சாரதா பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.[2]
இப்பல்கலைக்கழகம் பல்வேறு முன்னெடுப்புகளின் மூலம் தனது செயல்பாட்டு பரப்பை விரிவுபடுத்தியுள்ளது. அவற்றில், சுகாதாரக் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு பங்களிக்கும் சாரதா மருத்துவமனை, உசுபெக்கிசுத்தான்,[3] ஆக்ரா[4] ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட சாரதா பல்கலைக்கழக வளாகங்கள் குறிப்பிடத்தக்கவை.
மேலும், சாரதா சர்வதேசப் பள்ளி[5], சாரதா கேர் ஹெல்த்சிட்டி[6] ஆகியவை அண்மையில் தொடங்கப்பட்டு, சாரதா கல்வி நிறுவனக் குழுமத்தின் கீழ் தொடக்கக் கல்வி மற்றும் மேம்பட்ட சுகாதாரச் சேவைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Sharda Group, Agra". Sharda Group (Hindustan & Anand Campus) (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-07.
- ↑ "Best Hospital in Noida, Delhi NCR - Sharda Hospital". www.shardahospital.org. Retrieved 2025-02-07.
- ↑ "Sharda University Uzbekistan - 1st Fully Independent International University in Uzbekistan". www.shardauniversity.uz. Retrieved 2025-02-07.
- ↑ "Sharda University Agra - Top Private University in AGRA". www.agra.sharda.ac.in (in ஆங்கிலம்). Retrieved 2025-02-07.
- ↑ "Best International CBSE School in Agra, India | Sharda World School". www.sws.ac.in (in ஆங்கிலம்). Retrieved 2025-02-07.
- ↑ "Health Care - Home". shardacare.com. Retrieved 2025-02-07.