சாரதா நிதி நிறுவன மோசடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னைய வகைதனியார் நிறுவனம்
வகைசேமிப்பு சேகரிப்பு நிறுவனம்
நிலைஇந்தக் குழும நிறுவனங்கள் பொன்சி முறைமையில் செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள்
நிறுவனர்(கள்)சுதிப்தோ சென்
செயலற்றதுஏப்ரல் 2013
தலைமையகம்கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
முதன்மை நபர்கள்சுதிப்தோ சென், தலைவர் & மேலாண் இயக்குநர்
தேவயானி முகர்ஜி, இயக்குநர்
குனால் கோஷ், த.செ.இ, ஊடகத் துறை.
தொழில்துறைநிதி சேவைகள், கட்டுமான மேலாண்மை, தானுந்துகள், தயாரிப்பு
பணியாளர்16000+
பிரிவுகள்சாரதா நிலவுடமை
சாரதா ஏற்றுமதி
குளோபல் ஆட்டோமொபைல்சு
சாரதா ஊடகக் குழுமம்
இணையத்தளம்saradhagroup.biz

சாரதா நிதி நிறுவன மோசடி அல்லது சாரதா குழும நிதிய ஏமாற்று (வங்காள மொழி: সারদা কেলেঙ্কারী; Saradha Group financial scandal) கிழக்கு இந்தியாவில்[1]200 நிறுவனங்கள் அடங்கிய சாரதா குழும நிறுவனங்கள் பொன்சி முறையில் நடத்தி வந்த கூட்டு முதலீட்டு திட்டங்கள் (இவை பரவலாகவும் தவறாகவும் சீட்டுக் கட்டுதல் எனக் குறிப்பிடப்படுகின்றன) திடீரென மூழ்கியதாகும்.[2][3][4] இந்தக் குழுமம் ஏப்ரல் 2013இல் மூழ்கியதால் 1.7 மில்லியனுக்கும் மேற்பட்ட சேமிப்பாளர்களுக்கு[5] 200–300 பில்லியன் (யுஎஸ்$4–6 பில்லியன்) நட்டமேற்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.[6][7] இந்த சோசடியை அடுத்து இந்த நிறுவனங்கள் இயங்கியதாலும் ஏமாற்றப்பட்ட சேமிப்பாளர்களில் பெரும்பாலோர் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தமையாலும் மேற்கு வங்க அரசு இதனைப் புலாய்வு செய்ய விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது;[8] தவிரவும் தாழ்நிலை வருமான சேமிப்பாளர்களின் துயர் துடைக்க 5 பில்லியனுக்கு (92 மில்லியன் USD) நிதி ஒன்றையும் நிறுவியது.[9] இந்திய அரசும் தனது வருமானவரித்துறை மற்றும் செயலாக்க இயக்குநரகம் மூலம் பல்துறை விசாரணையைத் துவக்கியது. [10] மே 2014இல் இந்திய உச்ச நீதிமன்றம் மாநிலங்களிடையேயான மோசடிகள், பன்னாட்டு பணச்சலவை, மோசமான விதி மீறல்கள், கட்டுப்பாட்டு அதிகாரங்களின் செயலின்மை, அரசியல்வாதிகளின் கூட்டு இருக்கலாம் எனக் கருதி சாரதா குழும மற்றும் இதுபோன்ற பிற பொன்சி முறை நிதி முறைகேடுகளின் விசாரணையை நடுவண் புலனாய்வுச் செயலகத்திற்கு மாற்றியது.[11][12]

மேற்சான்றுகள்[தொகு]

  1. PTI. "More Saradha entities under SEBI scanner". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013.
  2. "Chitti chitti bang bang". The Telegraph (Mumbai). 30 April 2013. http://www.telegraphindia.com/1130501/jsp/bengal/story_16847319.jsp#.UYES6sV4800. பார்த்த நாள்: 1 May 2013. 
  3. Agarwal, Abhyudaya; Satyaditya Singh Dhakare (5 June 2013). "What exactly happened in the Saradha Scam? Understanding chit fund, MLM, corporate deposits and collective investment schemes". Marketing and advertising law. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
  4. Kaul, Vivek (30 April 2013). "Here's why Saradha was not a chit fund but a Ponzi scheme". Firstpost. http://www.firstpost.com/business/heres-why-saradha-was-not-a-chit-fund-but-a-ponzi-scheme-739597.html. பார்த்த நாள்: 3 May 2013. 
  5. Dutta, Romita (20 June 2013). "Saradha raised deposits from 1.7 mn people, probe finds". LiveMint. http://www.livemint.com/Specials/TQWJ1auPZMCYnZqC4tK7VN/Saradha-raised-deposits-from-17-million-people-probe-finds.html. பார்த்த நாள்: 19 August 2013. 
  6. Soudhriti Bhabani (23 January 2013). "Anger mounts over Saradha fund crisis as thousands of depositors face ruin". Daily Mail. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013.
  7. "Cheat funds, again". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 27 April 2013.
  8. "Mamata announces SIT, inquiry into Saradha". The Telegraph. Kolkota. 1 March 1999. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013.
  9. Mamata sets up fund for duped Saradha investors, Business Standard, 24 April 2013
  10. Dasgupta, Mithun (26 April 2013). "60 firms like Saradha Group operating in Bengal". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 29 April 2013.
  11. "SC jolt for Mamata: CBI to probe Saradha scam The CBI will also probe other Ponzi schemes in West Bengal, Odisha, Tripura, Jharkhand and Assam". Business Standard. 10 May 2014. http://www.business-standard.com/article/current-affairs/sc-jolt-for-mamata-cbi-to-probe-saradha-scam-114050900345_1.html. பார்த்த நாள்: 10 May 2014. 
  12. "Supreme Court orders just what Mamata didn’t want". Calcutta Telegraph. 9 May 2014. http://www.telegraphindia.com/1140510/jsp/frontpage/story_18327374.jsp. பார்த்த நாள்: 10 May 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_நிதி_நிறுவன_மோசடி&oldid=3757888" இலிருந்து மீள்விக்கப்பட்டது