சாரதா சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முனைவர் சாரதா சீனிவாசன்
கல்வி(பி.எச்.டி, 1996)
(கலையில் முதுகலை, தொல்லியல், மற்றும் தொல்பொருள் ஆய்வு, 1990)
(பி.டெக்,1987)
படித்த கல்வி நிறுவனங்கள்இலண்டன் பல்கலைக்கழகம் , ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்க ஸ்டடீஸ், லண்டன் , இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை
பணிபேராசிரியர், தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், பெங்களூர்
அறியப்படுவதுகலையில் விஞ்ஞான ஆய்வுகளின் பயன்பாடுகள் துறையில் பங்களிப்புகள் மற்றும் தொல்லியல், இந்திய பாரம்பரிய நடனம்
பெற்றோர்
விருதுகள்பத்மசிறீ (2019)

சாராதா சீனிவாசன் (Sharada Srinivasan) சீனிவாசன் பாரம்பரிய பரத நாட்டியம் நடனத்தின் ஒரு நிபுணர் ஆவார். [1] மேலும், கலை, தொல்பொருள், தொல்பொருள் ஆய்வு மற்றும் கலாச்சாரம் பற்றிய அறிவியல் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொல்பொருள் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியாவின் பெங்களூரில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்துடனும், இங்கிலாந்தின் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தில் கெளரவ பல்கலைக்கழக சக ஊழியருடனும் தொடர்புடையவர். [2] 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3]

தொழில்[தொகு]

சாரதா 1987ஆம் ஆண்டில் மும்பையின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றார். 1989 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த பின்னர், இவர் 1995ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் முனைவர் படித்து வந்தபோது தென்னிந்திய வெண்கல சிற்பத்தை ஆராய்ச்சி செய்தார். [4]

1986ஆம் ஆண்டில், சாரதா நான்கு இந்திய தொழில்நுட்ப வகுப்புத் தோழர்களுடன் இணைந்து 1988ஆம் ஆண்டு சிறப்புப் பிரிவில் கேன்ஸ் விருதை வென்ற நியூக்ளியர் வின்டர் என்ற ஆங்கில திரைப்படத்தில், நடித்தும், மற்றும் நடனமாடினார். இந்த படத்தை ஹோமி சேத்னா தயாரித்து, ஜுல் வேலானி என்பவர் இயக்கியுள்ளார். விஜய் கிருட்டிணா மற்றும் மிஷு வேலானி ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய தொழில்நுட்ப போவாய் வளாகத்தில் படமாக்கப்பட்டது. இது சாரதாவுக்கு வெற்றிகரமான நடன வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது.

நடனம்[தொகு]

இந்த சர்வதேச வானியல் ஆண்டில், சாரதா சீனிவாசன் தொகுத்த 'டான்ஸ் இ-டாய்ல்: நடராசா எட் லெ காஸ்மோஸ்' என்ற புகைப்படக் கண்காட்சி, விஞ்ஞானி-நடனக் கலைஞர் அலையன்ஸ் ஃபிராங்காயிஸ் பெங்களூர் ஏட்ரியத்தில் இடம் பெற்றது. இது அண்ட உணர்வுகள் மற்றும் வெண்கல நடராசர் கலை, உலோகம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் பரத நாட்டியம் மற்றும் பிரெஞ்சு சமகால நடன வடிவங்களின் தூண்டுதல் ஆகியவற்றின் பார்வையிலிரூந்து ஆராய்கிறது. [5]

சாரதா பரதநாட்டியத்தின் தென்னிந்திய பாரம்பரிய நடனத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கலைஞரும் ஆவார். ராயல் ஆசியடிக் சொசைட்டி, ராயல் அகாதடமி ஆஃப் ஆர்ட்ஸ், சோழர் கண்காட்சி, சர்வதேச வானியல் அகாதமி, தத்துவார்த்த இயற்பியலுக்கான சர்வதேச மையம், ட்ரைஸ்டே, இன்டாக்-பெல்ஜியம், நேரு மையம், லண்டன், சீனா கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக், தேசிய அறிவியல் கருத்தரங்கு, ஐதராபாத், டொயோமா பல்கலைக்கழகம், ஜப்பான் மற்றும் பிற. தென்னிந்திய வெண்கலங்கள் மற்றும் நடராசர் தொடர்பான கலை-அறிவியல்-நடனக் கண்ணோட்டங்கள் குறித்து ' சிவனின் காஸ்மிக் டான்ஸ்' என்ற தலைப்பில் 2008 ஆம் ஆண்டு சூன் மாதம் அலையன்ஸ் ஃபிராங்காயிஸ் பெங்களூரில் ஒரு புகைப்படக் கண்காட்சியைக் கொண்டிருந்தார். [6]

டான்ஸ் இ-டாய்ல்: நட-ராசா எட் லெ காஸ்மோஸ் (நட்சத்திரங்களின் நடனம்: நடராசர் மற்றும் காஸ்மோஸ்) இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் முதல் நேரடி, இணையத்தில் ஒளிபரப்பபட்ட ஊடாடும் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியாகும். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பெங்களூரில் சர்வதேச வானியல் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெற்றது. படைப்பு நடன மற்றும் கலை, அறிவியல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் அற்புதமான தொகுப்பு ஆகியவை இதை மிகவும் குறிப்பிடத்தக்கவை. [7]

விருதுகள்[தொகு]

சாரதா சீனிவாசனுக்கு கர்நாடக அரசு நிறுவிய மகளிர் விஞ்ஞானிகளுக்கான டாக்டர் கல்பனா சாவ்லா மாநில விருது 2011இல் வழங்கப்பட்டது. [8] 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [9]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_சீனிவாசன்&oldid=2930558" இருந்து மீள்விக்கப்பட்டது