சாரதாஸ்
| வகை | சில்லறை வணிகம் |
|---|---|
| வகை | துணிகள் |
| நிறுவுகை | 1969 |
| நிறுவனர்(கள்) | மணவாளன் பிள்ளை |
| தலைமையகம் | திருச்சிராப்பள்ளி, இந்தியா |
| உற்பத்திகள் | துணி, ஆயத்த ஆடை, பட்டுப் படவை |
சாரதாஸ் என்பது 1969 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளியில் தொடங்கப்பட்டு நடந்துவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஆடை நிறுவனங்களில் ஒன்றாகும்.
வரலாறு
[தொகு]சாரதாசை திருச்சிராப்பள்ளியின் மண்ணச்சநல்லூருக்கு அருகேயுள்ள ஓமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் பிள்ளை நிறுவினார்.[1] மணவாளன் தன் 13 வயதில் தன் அண்ணனுடன் மாட்டை விற்று கிடைத்த 10 ரூபாயுடன் இலங்கைக்குப் பயணமானார். அங்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொருளீட்டி அதை முதலாக கொண்டு இலங்கை நாவலப்பிட்டியில் சாரதாஸ் என்ற பெயரில் முதன்முதலில் துணிக் கடையைத் துவக்கினார். பின்னர் 1957 இல் கொழும்பில் புதிய கடையைத் துவக்கினார். 1963 இல் தமிழ்நாடு திரும்பி திருச்சிராப்பள்ளியில் என்.எஸ்.பி. சாலையில் இருந்த அம்பீஸ் கபே என்ற கடையை வாங்கி தற்போது உள்ள சாரதாஸ் கடையை 1969 அக்டோபர் 15 அன்று துவக்கினார். கடன் கிடையாது, பேரம் கிடையாது என்ற கொள்கையுடன் கடையைத் துவக்கினார். எதிர்காலத்தைக் கணித்து அதற்கேற்றவாறு கடையை விரிவுபடுத்தினார். அதற்காக தரமான பொருட்களை நாடு முழுவதும் தேடிச்சென்று குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துவந்து விற்பனை செய்தார்.
தீபாவளி, பொங்கள் போன்ற நாட்களில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து பிற கடைகள் வணிகம் பார்த்துவந்த நிலையில் மணவாளன் பண்டிகை நாளில் கடையை மூடும் உத்தியைக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர்கள் நெரிசலின்றி தங்களுக்கு பிடித்தவற்றை வாங்கவேண்டும், தங்கள் ஊழியர்கள் உண்ண இடைவேளை வேண்டும் என்று விரும்பினார். அதற்கேற்ப வணிகம் நடத்தினார்.[2]
எரிப்பு
[தொகு]கறுப்பு யூலையில் இலங்கை கொழும்பில் இருந்த சாரதாஸ் கடை 1983 சூலை 25 அன்று எரிக்கப்பட்டது.