சாரண படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்காவில் ஒரு சிறுவர் சாரணர் படை, 1977

சாரணர் படை (Scout troop) என்பது இராணுவப் படைப் போல் சாரண மாணவர்கள், சாரண மாணவிகள் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. சாரணப் படை என்பது இராணுவம், காவல்காரா்கள் போன்ற படைகளில் போரிடுவது, பணிகளைச் செய்வது, குழுவாக சேர்ந்து செயல்படுவது ஆகியவற்றை சாரணப்படையில் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

சாரண - சாரணியா் மற்றும் சாரண இயக்கம்[தொகு]

சாரண இயக்கத்தில் சாரணப்படையில் சிறிய நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். சிறிய குழுவில் ஆறு முதல் எட்டு சாரண - சாரணியர்கள் இருப்பார்கள். சாரண - சாரணியர்களின் வயது 10 முதல் 18 முடிய இருக்க வேண்டும். சாரணப்படையானது அதிலுள்ள எண்ணிக்கையை பொருத்து மாறுபடலாம். சாரணப்படையாது வழக்கமாக கூடும் இடத்தில் கூடிக்கொள்ளலாம். சில சாரணப் படை கூடுதலான செயல்பாடுகளையும் செய்யலாம். சில சமையங்களில் சாரணப்படைகள் மற்ற சாரணப் படைகளான பேவர்ஸ், குருளையா், ரோவர்ஸ் ஆகிய பல்வேறு குழுக்களுடன் சோ்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை கொடுக்கலாம்.

தலைமைப்பண்பு :[தொகு]

சாரணப்படை தோற்றுவிப்பதற்கான காரணம் சாரண - சாரிணயரில் தலைமைப் பண்பை உருவாக்கி சிறந்த தலைவனை உருவாக்கவேண்டும் என்பதற்குத் தான். சாரணப்படையானது சிறிய நான்கு குழுக்கலாக பிாிக்கப்பட்டு அந்த சிறிய குழுவிற்கு ஒரு தலைவனை உருவாக்க வேண்டும். அவன் தான் அச்சிறிய குழுவின் தலைவன் எனப்படுவான். அந்தச் சிறிய குழுவிற்கு தலைவன் தலைமையில் கண்ணிய மன்ற கூட்டம் கூட்டப்படும். அந்த கண்ணிய மன்றக் கூட்டத்தில் சிறிய குழுவின் தலைவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். கண்ணிய மன்ற கூட்டத்தில் அடுத்த நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் ஆகியவை விவாதிக்கப்படும். கண்ணிய மன்றத்திற்கு கட்டுபட்டவன் தான் தலைவன் உன்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரண_படை&oldid=2545957" இலிருந்து மீள்விக்கப்பட்டது