சாய் நாட் மாகாணம்
சாய் நாட் மாகாணம்
Chai Nat Province ชัยนาท | |
|---|---|
வாட் பார்க் கிளோங் மக்காம் தாவோ | |
| குறிக்கோளுரை: புகழ்பெற்ற சாவோ பிராயா அணை; பிரபலமான பறவைகள் பூங்கா; பம்ப்ளிமாஸ் மற்றும் வெள்ளை வெள்ளரிகள் நிறைந்த பகுதி. หลวงปู่ศุขลือชา เขื่อนเจ้าพระยาลือชื่อ นามระบือสวนนก ส้มโอดกขาวแตงกวา | |
தாய்லாந்தில் சாய் நாட் மாகாணம் | |
| ஆள்கூறுகள்: 15°11′06″N 100°07′29″E / 15.18500°N 100.12472°E | |
| நாடு | |
| மாகாணம் | சாய் நாட் மாகாணம் |
| தலைநகரம் | சாய் நாட் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2,506 km2 (968 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 65-ஆவது[1] |
| மக்கள்தொகை (2024)[2] | |
| • மொத்தம் | ▼3,13,759 |
| • தரவரிசை | 69-ஆவது |
| • அடர்த்தி | 131/km2 (340/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 33-ஆவது |
| மனிதச் சாதனை குறியீடு[3] | |
| • HAI (2022) | 0.6124 73-ஆவது |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி[5] | |
| நேர வலயம் | தாய்லாந்து நேரம் +7 |
| அஞ்சல் குறியீடு | 17xxx |
| தொலைபேசி | 056 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | TH-18 |
| இணையதளம் | chainat chainatpao |
சாய் நாட் மாகாணம் (ஆங்கிலம்: Chai Nat; தாய்: ชัยนาท) என்பது தாய்லாந்தின் 77 மாகாணங்களில் (சாங்வாட் (Changwat) ஒன்றாகும். இந்த மாகாணம் மத்திய தாய்லாந்து பகுதியில் அமைந்துள்ளது. சாய் நாட் நகரம் பேங்காக்கிற்கு வடக்கே 188 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[6]
சாய் நாட் மாகாணத்திற்கு அருகிலுள்ள மாகாணங்கள்:
வரலாறு
[தொகு]சாய் நாட் (Chai Nat) என்ற சொல் சமசுகிருத மொழியின் ஜெயநாதா (Jayanāda) என்ற சொல்லிலிருந்து உருவானது. இதற்கு "வெற்றியின் முழக்கம்" அல்லது "வெற்றித் தலம்" என்று பொருள். சாய் நாட் முதன்முதலில் அயூத்தியா பேரரசின் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அயூத்தியா வரலாற்று ஆவணங்களின் (Ayutthaya Testimonies) பதிவுகளில், சாய் நாட்டின் மாகாண மையம் 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சயாமிய மன்னரான சுரிந்திரராஜா (Surindrarāja) என்பவரால் தோற்றுவிக்கப் பட்டதாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் 'பான் பிரான் நியூவா' (தாய்: บ้านพรานเนื้อ) என்ற இடத்தை 'பிரா நகோன் சாய் நாட் புரி' (தாய்: พระนครชัยนาทบุรี) என மறுபெயரிட்டு, அதனை அந்த நிலப்பகுதியின் புதிய தலைநகரமாக அறிவித்தார்.[7]:41
அண்டை நாடான பர்மாவின் இராணுவப் படையெடுப்புகளை எதிர்கொள்வதற்கும்; எதிர்த்துப் போராடுவதற்கும் சாய் நாட் ஒரு முதன்மையான இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது. இங்கு நடைபெற்ற போர்களில் பர்மியப் படைகள் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப் பட்டதால், இப்பகுதிக்கு சாய் நாட் (வெற்றித் தலம்) என்ற பெயர் நிலைத்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சப்பானியப் படைகள் தாய்லாந்தை விட்டு வெளியேறியபோது, அந்நாட்டில் கடுமையான பொருளாதாரச் சரிவும் உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது. இச்சூழலில் சாய் நாட் மாகாணம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் கொள்ளையர்கள் குழுக்களாக இணைந்து கால்நடைகளைத் திருடுவதிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டனர்.[8]
புவியியல்
[தொகு]சாய் நாட் மாகாணம் மத்திய தாய்லாந்தின் சாவோ பிராயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் சமவெளியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தெற்கே சாவோ பிராயா அணை (Chao Phraya Dam) (முன்னர் சாய் நாட் அணை) ஆற்றின் நீரைத் தேக்குகிறது. சாவோ பிராயா அணையானது வெள்ளக் கட்டுப்பாட்டிற்கும், கீழ் பள்ளத்தாக்கின் நெல் வயல்களுக்குப் பயன்படும் நாட்டின் மிகப்பெரிய பாசன முறைமைக்குள் நீரைத் திருப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அணை 1957-ஆம் ஆண்டில் நிறைவடைந்த பெரிய சாவோ பிராயா திட்டத்தின் (Greater Chao Phraya Project) ஒரு பகுதியாகும். இதுவே தாய்லாந்தில் கட்டப்பட்ட முதல் அணை என அறியப்படுகிறது. மொத்தக் காடுகளின் பரப்பளவு 64 சதுர கிலோமீட்டர் அல்லது மாகாணப் பரப்பளவில் 2.6 விழுக்காடு ஆகும்.[9]
சின்னம்
[தொகு]இம்மாகாணத்தின் முத்திரையில் பௌத்த தர்மசக்கரம்; மற்றும் அதன் பின்னணியில் காம்பேங் மலை (Khao Khaw) எனப்படும் ஒரு சிறிய குன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் மாகாணத்தின் புகழ்பெற்ற புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.[10] ஈட்டி மரம் (Rosewood tree - Dalbergia cochinchinensis) இம்மாகாணத்தின் அதிகாரப்பூர்வ மரமாகும். சரக்கொன்றை மலர் (Golden Shower Flower - Cassia fistula) இம்மாகாணத்தின் அதிகாரப்பூர்வ மலராகும்.
மாகாண நிருவாகம்
[தொகு]
சாய் நாட் மாகாணம் 8 மாவட்டங்களாக (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்கள் மேலும் 53 துணை மாவட்டங்களாகவும் 503 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022
[தொகு]2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human Achievement Index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]
| நிலை | வகைப்பாடு |
| 1 - 13 | உயர்வு |
| 14 - 29 | சற்று உயர்வு |
| 30 - 45 | சராசரி |
| 46 - 61 | சற்று குறைவு |
| 62 - 77 | குறைவு |
| தாய்லாந்து மாகாணங்களின் மனிதச் சாதனை குறியீடு 2022 |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
- ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025.
, year 2024, provincial level, Excel File, no.18
- 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024.
, page 40
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024.
, page 23
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
- ↑ "Distance: Bangkok to Chai Nat". Google Maps. Retrieved 29 May 2015.
- ↑ Phraya Pariyattithamthada (1968). Ayutthaya Testimonies (PDF) (in தாய்). Rung Rueang Tham. Archived from the original (PDF) on 25 April 2023. Retrieved 12 December 2024.
- ↑ Reynolds, Craig J. (2019-10-22). Power, Protection and Magic in Thailand: The Cosmos of a Southern Policeman (in ஆங்கிலம்). ANU Press. p. 50. ISBN 978-1-76046-317-5.
- ↑ "ตารางที่ 2 พี้นที่ป่าไม้ แยกรายจังหวัด พ.ศ.2562" [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department (in Thai). 2019. Retrieved 6 April 2021.
, information Forest statistics Year 2019
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Chainat". THAILEX Travel Encyclopedia. Archived from the original on 29 May 2015. Retrieved 29 May 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Chainat Province சாய் நாட் மாகாணம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிமூலத்தில் Chai Nat சாய் நாட் பற்றிய ஆக்கங்கள்
