சாய்க்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாய்க்காடு சங்ககாலத்திலும் சிறப்புற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. இவ்வூர் தமிழ்நாட்டில் சீர்காழிக்குத் தென்கிழக்கில் 11.5 கிலோமீட்டர் தொலைவில் காவிரியாற்றின் வடகரையில் உள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகில் உள்ளது குறிப்பு

சங்கப்பாடல்[தொகு]

மூலங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் தலைவியின் நெற்றி அழகுக்கு இந்த ஊரை உவமையாகக் காட்டியுள்ளார். அவளது கூந்தல் மயிர் போலச் சாய்க்காட்டு வயல்களில் நெல் விளைந்து கதிர்கள் சாய்ந்திருந்தனவாம். (நற்றிணை 73)

மதுரை மருதன் இளநாகனார் என்னும் சங்ககாலப் புலவரும் இவ்வூரைப்பற்றிக் குறிப்பிடுகிறார். இவர் தலைவியின் தோள் இவ்வூர்த் 'தண்பணை'(=நீர்வயல்) போல உள்ளது என்கிறார். இங்குள்ள கழிகளில் மீன் பிடிக்கும்போது தப்பிய இறால் மீன் தன் இனத்தோடு சென்று இந்தத் தண்பணையில் தங்கும் என்கிறார். (அகம் 220)

தேவாரப் பாடல்கள்[தொகு]

திருநாவுகரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் இவ்வூர்ச் சிவபெருமானைக் கண்டு பாடியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்க்காடு&oldid=869804" இருந்து மீள்விக்கப்பட்டது