சாயிமாதா சிவபிருந்தா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாயிமாதா சிவபிருந்தா தேவி தமிழ்நாட்டில்புதுக்கோட்டையில் நட்டுவனார்-நல்லம்மாளுக்கு மகளாக 1927இல் பிறந்தார்.

படிப்பு[தொகு]

இவர், திருக்கோகர்ணம் ஸ்டேட் செகண்டரி பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்தார். அது முதலாக கதை, கவிதைகள் எழுதினார்.

ஆன்மீக ஈடுபாடு[தொகு]

புதுக்கோட்டை ராணியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான், ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டது. பிறகு பிருந்தவனம் எனும் தம் பெயரைப் பிருந்தாவனதேவி என மாற்றினார். நாளடைவில் புதுக்கோட்டையிலுள்ள திருவருள் மட ஆதீன கர்த்தரானார்.

தேசப்பற்று[தொகு]

1948இல் காந்தி இறந்தபோது அவரைப் பற்றி தம் முதல் கவிதையை எழுதினார். வல்லத்தரசு தலைமையில் நடந்த விழாவில் காந்தி,நேருவின் தியாகத்தைப் பற்றி பேசினார்.

மறைவு[தொகு]

27 நவம்பர் 1998இல் இயற்கையெய்தினார்.

உசாத்துணை[தொகு]

பைம்பொழில் மீரான், தலைநிமிர்ந்த தமிழச்சிகள், சூலை 2007