சாயாவனேஸ்வரர் கோவில்
| தேவாரம் பாடல் பெற்ற சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் | |
|---|---|
![]() | |
சாயாவனேசுவரர் கோயில், சாயாவனம், மயிலாடுதுறை மாவட்டம் | |
| புவியியல் ஆள்கூற்று: | 11°08′51″N 79°49′26″E / 11.1476°N 79.8239°E |
| பெயர் | |
| புராண பெயர்(கள்): | திருச்சாய்க்காடு, மேலையூர் |
| பெயர்: | சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் |
| அமைவிடம் | |
| ஊர்: | சாயாவனம் |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | சாயாவனேஸ்வரர் |
| தாயார்: | குயிலினும் இனி மொழியம்மை |
| தல விருட்சம்: | கோரை |
| தீர்த்தம்: | ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | சம்பந்தர், அப்பர், |
| வரலாறு | |
| தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
| அமைத்தவர்: | கோச்செங்கண்ணன் |
சாயாவனேஸ்வரர் கோவில் (Sayavaneswarar Temple)[1] என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் காவேரிப்பூம்பட்டினம் அருகிலுள்ள திருசாய்க்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இந்தக் கோவிலின் பிரதான தெய்வம் சிவன் ஆவார். இந்தக் கோவில் நடுத்தர சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். சைவ நாயன்மார்கள் தங்களது தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இக்கோயில் அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்தலங்களில் இது 9-ஆவது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9-ஆவது தேவாரத்தலம் ஆகும்.
கோவில்
[தொகு]திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவெண்காடு, சாயவனம் மற்றும் ஸ்ரீவாஞ்சியம் ஆகியவை காசிக்கு இணையான புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன. காசியில் நகரம் காசி விஸ்வநாதர் கோவிலை மையமாகக் கொண்டு அமைந்துள்ளதைப் போலவே, காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள இத்தலங்களிலும் கோவில்கள் நகரத்தின் மையமாக உள்ளன.இவற்றில் திருவையாற்றில் ஐயாரப்பர் கோவில், திருவிடைமருதூரில் மகாலிங்கேஸ்வரர் கோவில், மயிலாடுதுறையில் மயூரநாதசுவாமி கோவில், சாயவனத்தில் சாயவனேஸ்வரர் கோவில், திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில், ஸ்ரீவாஞ்சியத்தில் ஸ்ரீவாஞ்சிநாதசுவாமி கோவில் ஆகியவை முக்கிய மையத் தலங்களாக விளங்குகின்றன.[2][3]
தல வரலாறு
[தொகு]இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது) உடனே சிவன் தோன்றி, ""இந்திரா! இந்தக் கோயிலைத் தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக, என அருள்புரிந்தார்.
சிறப்புகள்
[தொகு]இயற்பகை நாயனார் தம் மனைவியை இத்தலத்தின் எல்லை வரை அழைத்துவந்து இறைவனுடன் வழியனுப்பி வைத்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்), அத்துடன் இயற்பகை நாயனாரின் அவதாரத்தலம் இதுவாகும்.
சிலை திருட்டு
[தொகு]நின்ற சம்பந்தர் சிலை ஒன்று 1965 முதல் 1975 காலப்பகுதிக்குள் திருடப்பட்டது (1958-ஆம் ஆண்டுக்கான ஆவண ஆதாரம் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் மூலம் உள்ளது). பின்னர் தமிழ்நாடு குற்றப்புலனாய்வு துறையின் சிலை பிரிவு மற்றும் இந்தியா பிரைட் திட்டத்தின் உதவியுடன், அது ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய கலைக்காட்சியகத்தில் கண்டறியப்பட்டு 2022-ஆம் ஆண்டு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.[4][5][6][7][8][9]
இலக்கியச் குறிப்புகள்
[தொகு]சம்பந்தர் இத்தலத் தெய்வத்தின் சிறப்பை இவ்வாறு பாடுகிறார்:[10]
| “ | வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர் ஓத நஞ்சணி கண்ட ருகந்துரை கோயில் |
” |
திருநாவுக்கரசர் (அப்பர்) இத்தலத் தெய்வத்தின் மகிமையை இவ்வாறு வர்ணிக்கிறார்:[11]
| “ | புயங்கமைஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச் சிவன்றிரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்ச |
” |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ta:சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்
- ↑ Venkatraman, Sekar (2019). Temples of Forgotten Glory: A Wide Angle Exposition. Notion Press. p. 172. ISBN 9781645876250.
- ↑ Ayyar, P. V. Jagadisa (1993). South Indian Shrines: Illustrated (2nd ed.). New Delhi: Asian Educational Service. p. 244. ISBN 81-206-0151-3.
- ↑ "Bringing back our heritage: Return of Tamil Nadu Antiquities" (PDF). pib.gov.in. Retrieved 19 August 2023.
- ↑ S., Vijay Kumar (30 March 2016). "IDs of two more idols in OZ found, time for their return". Times of India. Retrieved 19 August 2023.
... missing from this report was the Sambandar which too is now stranded in Australia. An analysis of the photos published in the book 'Shadows of Gods' — jointly published by the IFP and the Pondicherry Centre of the French School of Asian Studies and released by PM Modi and French President François Hollande – shows a striking resemblance between the idol in Australia to that which IFP photographed at Sayavanam near Sirkazhi in 1958. ...
- ↑ National Gallery of Australila(July 29, 2021). "National Gallery Of Australia Returns 14 Works Of Art To India". செய்திக் குறிப்பு.
- ↑ "National Gallery of Australia returns 14 art works including Chola idols". The Hindu. 29 July 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/national-gallery-of-australia-returns-14-art-works-including-chola-idols/article35604254.ece.
- ↑ Sivarajah, Padmini (1 June 2022). "10 antiques from Tamil Nadu temples restituted". Times of India. https://timesofindia.indiatimes.com/city/chennai/10-antiques-from-tamil-nadu-temples-restituted/articleshow/91947781.cms. "... The standing Sambandar was documented by the French Institute in Puducherry as belonging to the Sayavanam temple in 1960. ..."
- ↑ "Temples get back idols returned by US, Aus". DT Next. 10 June 2022. https://www.dtnext.in/tamilnadu/2022/06/09/temples-get-back-idols-returned-by-us-aus. "... the Sambandar idol was given to the Nagapattinam Sayavaneswarar Temple. ..."
- ↑ Gnanasambandar Tevaram, II: 38: 7
- ↑ Tirunavukkarasar Tevaram, IV: 65: 10
- Tourist Guide to Tamil Nadu. Sura Books. 2010. p. 69. ISBN 978-81-7478-177-2.
படத்தொகுப்பு
[தொகு]- கோயில் குளம்
- மூலவரின் விமானம் (பிரகாரத்திலிருந்து)
- முன் மண்டபம்
- பிரகாரம்
- பிரகாரம்
| திருச்சாய்க்காடு | |||
|---|---|---|---|
| முந்தைய திருத்தலம்: திருக்கலிக்காமூர் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருப்பல்லவனீச்சுரம் |
|
| தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 9 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 9 | ||
