உள்ளடக்கத்துக்குச் செல்

சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சாய்க்காடு, மேலையூர்
பெயர்:சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:சாயாவனம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சாயாவனேஸ்வரர்
தாயார்:குயிலினும் இனி மொழியம்மை
தல விருட்சம்:கோரை
தீர்த்தம்:ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர்,
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:கோச்செங்கண்ணன்

திருச்சாய்க்காடு - சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலமாகும்.

அமைவிடம்

[தொகு]

இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் அருகில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 9 வது தேவாரத்தலம் ஆகும்.

தல வரலாறு

[தொகு]

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது) உடனே சிவன் தோன்றி, ""இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக, என அருள்புரிந்தார்.

சிறப்புகள்

[தொகு]

இயற்பகை நாயனார் தம் மனைவியை இத்தலத்தின் எல்லை வரை அழைத்துவந்து இறைவனுடன் வழியனுப்பி வைத்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்), அத்துடன் இயற்பகை நாயனாரின் அவதாரத்தலம் இதுவாகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]