சாம் ஹிக்கின்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமுவேல் ஹிக்கின்பாட்டம்
பிறப்பு(1874-10-27)27 அக்டோபர் 1874
மன்செஸ்டர், இங்கிலாந்து
இறப்பு11 சூலை 1958(1958-07-11) (அகவை 83)
புரோஸ்ட்புரூப், புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தேசியம்அமெரிக்கர்
துறைவேளாண் பொருளாதாரம்
கிராமிய சமூகவியல்
பணியிடங்கள்சாம் ஹிக்கின்பாட்டம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், மஹேவா நைனி, அலகாபாத் 211007
கல்வி கற்ற இடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம்
துணைவர்யேன் எதிலிண்ட் கோடி

சாமுவேல் ஹிக்கின்பாட்டம் (Sam Higginbottom) (27 அக்டோபர் 1874 – 11 ஜூன் 1958) இங்கிலாந்தின் மன்செஸ்டரில் பிறந்த இவர் இந்தியாவின் அலகாபாத்தில் ஆங்கிலேய கிறிஸ்தவ மறைபணி அமைப்பை நிறுவினார். மேலும்,இவர் அலகாபாத் வேளாண்மை நிறுவனத்தையும் நிறுவினார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஹிக்கின்பாட்டம் வேல்ஸில் பிறந்தார். குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. இவர் சிறுவயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறி, கசாப்புக்கடை சிறுவன் வாடகையுந்து ஓட்டுநர், பால் வழங்குபவர் என வெவ்வேறு காலங்களில் வெவேறு வேலைகளை செய்தார்.[1] இருப்பினும், இவர் கிறிஸ்தவ நற்செய்தியில் வலுவான ஆர்வத்தை கொண்டிருந்தார். மேலும் ஒரு போதகராகவோ அல்லது மறைபணியாளாராக மாற தீர்மானித்தார்.[1] 1894 முதல் 1899 வரை மாசச்சூசெட்ஸில் உள்ள மவுண்ட் ஹெர்மன் பள்ளியில் படித்த பின்னர்,[1] 1903 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியிலும் படித்து இளநிலைப் பட்டம் பெற்றார்.[1] [2] [3] [4]

இந்தியாவில் வேலை[தொகு]

சாம் ஹிக்கின்பாட்டம் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன், 1914

ஹென்றி போர்மனின் பரிந்துரையின் பேரில், 1903ஆம் ஆண்டில் பிரெஸ்பைடிரியன் தேவாலயத்தின் வட இந்திய சேவைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இவர் இந்தியா வந்தார்.[5] அப்போதிருந்து 1909 வரை அலகாபாத் கிறிஸ்தவக் கல்லூரியில் (இப்போது எவிங் கிறிஸ்தவக் கல்லூரி ) பொருளாதாரத்தையும், அறிவியலையும் கற்பித்தார்.<[2][5] கல்லூரியில் தன்னுடன் பணி புரிந்த ஒகையோவின் கிளீவ்லாந்தைச் சேர்ந்த யேன் எத்தேலிண்ட் கோடி என்பவரை 1904 ஆம் ஆண்டில் மணந்தார்.[6] இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.[2]

1909 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்காவுக்குத் திரும்பி ஒகைய்யோ மாநில பல்கலைக்கழகத்தில் வேளாண்மையைப் படிக்க மூன்று ஆண்டுகள் செலவிட்டார். பின்னர் மீண்டும் அலகாபாத்துக்குத் திரும்பி விஞ்ஞான விவசாய முறைகளை கற்பித்தார்.[2][6] இவரது கல்வித் திட்டங்களால் 1919இல் அலகாபாத் வேளாண் நிறுவனம் நிறுவப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், இது இவரது நினைவாக சாம் ஹிக்கின்பாட்டம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் ( SHUATS ) என மறுபெயரிடப்பட்டது.[7]

பிற்கால வாழ்க்கை[தொகு]

இவர், 1921 இல் வெளியிடப்பட்ட தனது படைப்புகளைப் பற்றிய ஒரு புத்தகமும் 1949 இல் வெளியிடப்பட்ட சுயசரிதை என இரண்டு புத்தகங்களை எழுதினார். இந்தியாவில் இருந்தபோது, மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு ஆகியோருடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார்.[2] 1945இல் ஓய்வு பெற்று புளோரிடா சென்ற இவர் தனது மகள் திருமதி சார்லஸ் கோட்ஸின் வீட்டில் காலமானார்.[8]

தொகுப்புகள்[தொகு]

இவரது ஆவணங்கள் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் ஆல்பர்ட் மற்றும் ஷெர்லி சிறிய சிறப்பு சேகரிப்பு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[8]

நூலியல்[தொகு]

  • Sam Higginbottom. The Gospel and the Plough, Or, The Old Gospel and Modern Farming in Ancient India. 1921. London: Central Board of Missions and Society for Promoting Christian Knowledge. Republished in 2006: ISBN 1-4254-8665-7
  • Sam Higginbottom. Sam Higginbottom, Farmer: An Autobiography. 1949. Republished in 2007: ISBN 978-0-548-44200-5

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 History பரணிடப்பட்டது 2016-11-14 at the வந்தவழி இயந்திரம், Allahabad Agricultural Institute website
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 David Benjamin Rees (2002). Vehicles of Grace and Hope: Welsh Missionaries in India 1800-1970. William Carey Library. பக். 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780878085057. https://books.google.com/books?id=8rMKm-Ee1dYC&q=Sam+Higginbottom+-institute&pg=PA59. 
  3. Padre Sahib, டைம் (இதழ்), 19 September 1949
  4. [J.N.W.] (1944). "Sam Higginbottom. An Appreciation". Indian Farming 5 (10): 446-448. 
  5. 5.0 5.1 Dr. Sam Higginbottom (1874-1958) பரணிடப்பட்டது 2021-07-22 at the வந்தவழி இயந்திரம், Allahabad Agricultural Institute website.
  6. 6.0 6.1 Padre Sahib, Time magazine, 19 September 1949
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-07-22.
  8. 8.0 8.1 "A Guide to the Additional Papers of Sam Higginbottom and Jane Ethelind Cody Higginbottom 1844-1971". University of Virginia Library. பார்க்கப்பட்ட நாள் 2 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_ஹிக்கின்பாட்டம்&oldid=3748485" இலிருந்து மீள்விக்கப்பட்டது