சாம்பியா வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம்
| உருவாக்கம் | 1953 |
|---|---|
| தலைமையகம் | சாம்பியா |
| வலைத்தளம் | Website |
சாம்பியா வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் (Wildlife and Environmental Conservation Society of Zambia) என்பது ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக செயல்படும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். 1953-ஆம் ஆண்டில் இலாப நோக்கற்ற அமைப்பாக இது நிறுவப்பட்டது. முக்கியமாக வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளில் இச்சங்கம் கவனம் செலுத்துகிறது.[1]
சாம்பியா வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்புக்கான கொள்கைகளை ஊக்குவிக்கும், சாம்பியாவின் ஒரே நாடு தழுவிய சுற்றுச்சூழல் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு சமூக-சார்ந்த பாதுகாப்பு அமைப்பாகும். வனவிலங்கு பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, நீர் மற்றும் காலநிலை சார்ந்த மீள்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று முக்கிய நோக்கங்களுடன், இவர்களின் செயல்பாடுகளுக்கு நான்கு முக்கிய பகுதிகள் அடித்தளமாக அமைந்துள்ளன. [2][3]
சாம்பியா பரந்த வனப்பகுதிகள் மற்றும் வளமான வனவிலங்கு வளங்களைக் கொண்ட நாடாகும். வேட்டையாடுதல், வாழிட அழிவு, காடழிப்பு போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து இவ்வளங்களைப் பாதுகாப்பதில் இச்சங்கம் போன்ற அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wildlife and Environmental Conservation Society of Zambia". www.ecohubmap.com (in ஆங்கிலம்). Archived from the original on 2025-06-16. Retrieved 2025-08-10.
- ↑ "Wildlife and Environmental Conservation Society of Zambia (WECSZ) | Department of Economic and Social Affairs". sdgs.un.org. Retrieved 2025-08-10.
- ↑ Times, Administrator. "Times of Zambia | Why butterflies matter" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-08-11.