சாம்பியா அரசுத் தலைவர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாம்பியாவின் அரசுத் தலைவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாம்பியா குடியரசு குடியரசுத் தலைவர்
Presidential Flag
தற்போது
அகைந்தெ இச்சிலெமா

24 ஆகத்து 2021 முதல்
பதவிக் காலம்5 ஆண்டுகள், ஒருமுறை புதுப்பிப்பு
முதலாவதாக பதவியேற்றவர்கென்னத் கவுண்டா
உருவாக்கம்24 அக்டோபர் 1964
துணை குடியரசுத் தலைவர்சாம்பியாவின் துணை குடியரசுத் தலைவர்

சாம்பியாவின் குடியரசுத் தலைவர் (President of Zambia) சாம்பியாவின் நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். 1964இல் சாம்பியா விடுதலை பெற்ற பிறகு கென்னத் கவுண்டா முதன்முதலில் இப்பதவியில் பொறுப்பாற்றியவராவார். 1991ஆம் ஆண்டில் கவுண்டா பதவி விலகியதை அடுத்து ஐந்து நபர்கள் இப்பதவியில் இருந்துள்ளனர்: பிரெடிரிக் சிலுபா, லெவி முவனவாசா, ரூப்பையா பண்டா, மைக்கேல் சாட்டா, மற்றும் தற்போதைய தலைவரான எட்கார் லுங்கு. தவிரவும், குடியரசுத் தலைவர் மைக்கேல் சாட்டா இறந்த பிறகு தற்காலிகமாக கய் இசுக்காட்டு பதவி வகித்துள்ளார்.

ஆகத்து 31, 1991 முதல் குடியரசுத் தலைவர் அரசுத் தலைவராகவும் விளங்குகின்றார்; கவுண்டா ஆட்சியின் கடைசி மாதங்களில் சாம்பியப் பிரதமர் பதவி கலைக்கப்பட்டது.

சாம்பியா குடியரசுத் தலைவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

சாம்பியாவின் குடியரசுத் தலைவர்கள் (1964–நடப்பு)[தொகு]

கட்சிகள்

      ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சி
      பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்
      நாட்டுப்பற்றுடை முன்னணி
      தேசிய வளர்ச்சிக்கான ஐக்கிய கட்சி

குறிப்பு

§ எதிர்ப்பின்றித் தேர்வு
பணியில் இறப்பு

# ஒளிப்படம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
தேர்வு பொறுப்பேற்பு பொறுப்புத் துறப்பு அரசியல் கட்சி
1 கென்னத் கவுண்டா
(1924-2021)
1968
1973[§]
1978[§]
1983[§]
1988[§]
24 அக்டோபர் 1964 2 நவம்பர் 1991 ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சி
2 பிரெடிரிக் சிலுபா
(1943–2011)
1991
1996
2 நவம்பர் 1991 2 சனவரி 2002 பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்
3 லெவி முவனவாசா
(1948–2008)
2001
2006
2 சனவரி 2002 19 ஆகத்து 2008[†] பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்
ரூப்பையா பண்டா (தற்காலிகப் பொறுப்பு)[1]
(பி. 1937)
29 சூன் 2008 2 நவம்பர் 2008 பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்
4 ரூப்பையா பண்டா
(பி. 1937)
2008 2 நவம்பர் 2008 23 செப்டம்பர் 2011
5 மைக்கேல் சாட்டா
(1937–2014)
2011 23 செப்டம்பர் 2011 28 அக்டோபர் 2014[†] நாட்டுப்பற்றுடை முன்னணி
கய் இசுக்காட்டு (தற்காலிகப் பொறுப்பு)[2]
(பி. 1944)
28 அக்டோபர் 2014 25 சனவரி 2015 நாட்டுப்பற்றுடை முன்னணி
6 எட்கார் லுங்கு
(b. 1956)
2015 25 சனவரி 2015 24 ஆகத்து 2021 நாட்டுப்பற்றுடை முன்னணி
7 அகைந்தெ இச்சிலெமா
(பிறப்பு 1962)
2021 24 ஆகத்து 2021 நடப்பில் தேசி வளர்ச்சிக்கான ஐக்கிய கட்சி

குறிப்புகள்[தொகு]

  1. முவனவாசாவிற்காக பொறுப்பில் 19 ஆகத்து 2008 வரை
  2. சாட்டா பணியில் இறந்தபோது தற்காலிகப் பொறுப்பு

பதவியில் இருந்த காலத்தின்படியான வரிசை[தொகு]

வரிசை எண் தலைவர் பதவியில் காலம்
1 கென்னத் கவுண்டா 27 ஆண்டுகள், 9 நாட்கள்
2 பிரெடிரிக் சிலுபா 10 ஆண்டுகள், 61 நாட்கள்
3 லெவி முவனவாசா 6 ஆண்டுகள், 230 நாட்கள்
4 ரூப்பையா பண்டா 3 ஆண்டுகள், 86 நாட்கள்
5 மைக்கேல் சாட்டா 3 ஆண்டுகள், 35 நாட்கள்
6 எட்கார் லுங்கு 6 ஆண்டுகள், 211 நாட்கள்
7 அகைந்தெ இச்சிலெமா 2 ஆண்டுகள், 238 நாட்கள்

|}

வெளியிணைப்புகள்[தொகு]