உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பவி சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பவி சௌத்ரி
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 ஜூன் 2024
முன்னையவர்பிரின்சு ராஜ்
தொகுதிசமஸ்திபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சூன் 1998 (1998-06-15) (அகவை 28)
அரசியல் கட்சிலோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்)
துணைவர்சாயன் குணால்
உறவுகள்கிசோர் குணால் (மாமனார்)
முன்னாள் மாணவர்• நோட்ரெ டேம் அகாதமி, பட்னா
• லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி
• டெல்லி பொருளாதாரக் கல்லூரி

சாம்பவி சௌத்ரி (Shambhavi Choudhary, பிறப்பு: ஜூன் 15,1998) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார், இது பட்டியல் சாதி சமூகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் லோக் ஜனசக்தி கட்சியை (ராம் விலாஸ்) பிரதிநிதித்துவப்படுத்தியது. 18வது மக்களவை உறுப்பினராக உள்ள இளைய உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சாம்பவி பீகாரின் சமஸ்திபரைச் சேர்ந்தவர். இவர் பீகார் அரசாங்கத்தின் கட்டிட கட்டுமானத் துறையின் அமைச்சராகவும், ஜனதா தளத்தின் தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்த அசோக் சவுத்ரியின் மகள் ஆவார்.[2]

சாம்பவி பாட்னாவின் நோட்ரே டேம் அகாதமியில் கல்வி பயின்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டில் டெல்லி லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார், பின்னர் 2022 ஆம் ஆண்டில் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். [3]

2022 ஆம் ஆண்டில் ஆச்சார்யா கிசோர் குணாலின் மகன் சயன் குணாலை சாம்பவி மணந்தார்.[4][5]

இலக்கியப் படைப்புகள்

[தொகு]

அசோக் சௌத்ரியுடன் இணைந்து சாம்பவி எழுதிய பீகார் கே காந்தி நிதீஷ் குமார் என்ற புத்தகம் பிரபாத் பிரகாசனால் வெளியிடப்பட்டது, அது சிறந்த விற்பனை நூலாக மாறியது.[6] இந்திய அரசியலமைப்பை மைதிலி மொழியிலும் இவர் மொழிபெயர்த்தார். டெல்லியில் அதன் வெளியீட்டை முன்னிட்டு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார், அங்கு பிரதமர் இவரின் மொழிபெயர்ப்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு சாம்பவியின் தொகுதி வளர்ச்சி குறித்து விசாரித்தார்.[7]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2024 ஆம் ஆண்டு பீகாரில் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக சாம்பவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] இது சமஸ்திபூர் மாவட்டத்தில் நான்கு விதனா சபா தொகுதிகளையும், தர்பங்கா மாவட்டத்தில் இரண்டு விதனா சபா தொகுதிகளையும் கொண்டுள்ளது. இவர் 579,786 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் சன்னி ஹசாரியை 187,251 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[9][10]

பிப்ரவரி 2025 இல், இவர் உள்துறை அமைச்சர் அமித் சாவைச் சந்தித்தார். அப்பொழுது இவரது தொகுதியின் வளர்ச்சி, பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.[2]

சமூகப் பணிகள்

[தொகு]

பாட்னா உள்ள கியான் நிகேதன் பள்ளியை சாம்பவி சௌத்ரி மேற்பார்வையிடுகிறார், இது பெண் கல்வியை தீவிரமாக ஆதரிக்கிறது.[11]

குறிப்புகள்

[தொகு]
  1. Ramashankar (2024-06-04). "NDA's Shambhavi Choudhary set to make history by becoming country's youngest MP from Bihar". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
  2. 1 2 "अमित शाह से मिलीं समस्तीपुर की सांसद शांभवी चौधरी, पति सायन कुणाल भी रहे साथ". www.livehindustan.com (in இந்தி). Archived from the original on 2025-02-13. Retrieved 2025-07-15.
  3. "Results 2024: Who is Shambhavi Choudhary, India's youngest MP?". Hindustan Times. Retrieved 5 June 2024.
  4. "Shambhavi-Sayan Love Story : दलित की बेटी और सवर्ण का बेटा, सगाई में पहुंचे सीएम नीतीश, अशोक चौधरी और किशोर कुणाल बने समधी". Navbharat Times (in இந்தி). Retrieved 2024-06-08.
  5. "Shambhavi Choudhary: One Of The Youngest Candidates Who One Lok Sabha Polls". NDTV.com. Retrieved 2024-06-08.
  6. Choudhary, Ashok; Choudhary, Shambhavi (2024-08-22). Bihar Ke Gandhi Nitish Kumar: Ashok Choudhary [Author]; Shambhavi Choudhary's Bestseller & Famous Book (in ஆங்கிலம்). Prabhat Prakashan (published 22 August 2024). ISBN 978-93-5562-216-7.
  7. "Samastipur MP Shambhavi Chaudhary met PM Modi: congratulated him for the release of the Constitution in Maithili". Dainik Bhaskar. December 2024. Retrieved 14 July 2025.
  8. "Samastipur Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  9. "Samastipur, Bihar Lok Sabha Election Results 2024 Highlights: Shambhavi Secures the Seat by 187251 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  10. "Samastipur Election Result 2024 Live Updates: LJPRV's Shambhavi Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  11. "Shambhavi Choudhary: One Of The Youngest Candidates Who One Lok Sabha Polls". NDTV (in ஆங்கிலம்). 2024-06-15. Retrieved 2024-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பவி_சௌத்ரி&oldid=4585340" இலிருந்து மீள்விக்கப்பட்டது