சாம்பல் நீர்
Jump to navigation
Jump to search
சாம்பல் நீர் என்பது தோய்த்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டுப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் நீர் ஆகும். இவற்றை சேமித்து நீர்ப்பாசனம், கழிவறையினை கழுவுதல் போன்ற தேவைகளுக்குப் மீண்டும் பயன்படுத்தலாம். சாம்பல் நீரை மனிதக் கழிவுகள் கொண்ட நீருடன் (கறுப்பு நீர்) வேறுபடுத்துவர்.
மீள்பயன்பாடு[தொகு]
அண்மைக் காலத்தில் அதிகரித்து வரும் நீர்ச் செலவுகள் காரணமாக இந்த நீரை மீள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இசுரேலில் இந்த மீள்பயன்பாடு விரிவாக நடைபெறுகிறது.