சாமி வெங்கடாசலம் செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாமி வெங்கடாசலம் செட்டி (இறப்பு 17 நவம்பர் 1958): இவா் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிலதிபர் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், இம்பீரியல் சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.[1]

வாழ்க்கை[தொகு]

1920 களின் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1926 தேர்தல்களில் சென்னை சட்ட பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சைமன் குழு வருகையின் போது சுயராஜ் கட்சியின் தலைவராக அவர் பணியாற்றினார். 1925-26 இல் செட்டி சென்னை மாநகராட்சி தலைவராகவம் பணியாற்றினார்.

1934 ஆம் ஆண்டில், இந்திய இம்பீரியல் சட்டமன்ற கவுன்சில் தேர்தலில் ஆர்.கே.சண்முகம் செட்டியை தோற்கடித்தார். அவர் 1930 இல் பிற்பகுதியில் அரசியலில் இருந்து விலகுவதற்கு அறிவிப்பதற்கு முன்பு சட்டசபை உறுப்பினராக பணியாற்றினார்.

குறிப்புகள்[தொகு]

  1. Role of Press and Indian Freedom Struggle: All Through the Gandhian Era. APH Publishing. 1981. பக். 82. ISBN 8176482560, ISBN 9788176482561. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_வெங்கடாசலம்_செட்டி&oldid=2717584" இலிருந்து மீள்விக்கப்பட்டது