சாமியா பசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாமியா பசீர் (Samia Bashir) என்பவர் அமெரிக்காவில் வாழும் ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் கவிஞர், கட்டுரையாளர், பதிப்பாளர், சமூக நீதி செயல்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

சாமியா பசீரின் தந்தை சோமாலியா நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிவந்தவர். தாயார் ஆப்பிரிக்க அமெரிக்கன் ஆவார். சாமியா பசீர் பெர்க்லியில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இலக்கியப்பணி[தொகு]

ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்காக பயர் அண்டு இங்க் என்னும் ஒரு இலக்கியத் திருவிழாவை நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் படைப்பிலக்கியத்தைக் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆப்பிரிக்க அமெரிக்க பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்.

மறைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி புத்துயிர் கொடுப்பதும் அடக்கிவைக்கப் பட்ட குரல்களையும் கதைகளையும் வெளி உலகம் அறியச் செய்வதும் சாமியா பசீரின் குறிக்கோள்களாகும்.

சாமியா பசீரின் தாயார் மதத்தால் கிறித்தவர்; தந்தை மத நம்பிக்கையற்ற சோமாலி முசுலிம். ஆனால் சாமியா பசீர் தாம் மதவாதி இல்லை என்றும் மதம் என்பதும் ஆன்மீகம் என்பதும் வெவ்வேறானவை என்றும் கருதுகிறார்.

'உலகில் ஆணாதிக்கக் கலாச்சாரம் பெண்களுடைய கடின உழைப்பையும் தலைமைப் பண்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது' என்றும் கூறி வருகிறார்.

எழுதியவை[தொகு]

  • Apple Falls :Poems (2005)
  • Gospel:poems (2009)
  • Wearing Shorts on the first day of Spring ( 1999)
  • American Visa (2001)
  • Teasing Crow (2006)

அஸ்டிரேய லெஸ்பியன் அறக்கட்டளை வழங்கிய கவிதை விருது இவருக்குக் கிடைத்தது.

மேற்கோள்[தொகு]

http://www.poetryfoundation.org/bio/samiya-bashir

http://academic.reed.edu/creative_writing/faculty.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமியா_பசீர்&oldid=1753993" இருந்து மீள்விக்கப்பட்டது