உள்ளடக்கத்துக்குச் செல்

சாமா சாகேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமா சாகேபா
திருவிழாவின் போது தயார் செய்யப்படும் மூங்கில் கூடை
பிற பெயர்(கள்)சாமா கேலா
கடைப்பிடிப்போர்மைதிலி (இந்தியா & நேபாளம்)
வகைகலாச்சாரம், வரலாறு, மதம்
முக்கியத்துவம்உடன்பிறப்புகளுக்கு இடையே பந்தம்
தொடக்கம்கார்த்திகை சஷ்டிக்கு மறுநாள்
முடிவு[[கார்த்திகை பூர்ணிமா ]]

சாமா சாகேவா அல்லது சாமா சாகேபா என்று அழைக்கப்படும் இத்திருவிழா இந்திய துணைக்கண்டத்தின் மிதிலா [1] பகுதியில் இருந்து உருவான ஒரு இந்து பண்டிகையாகும்.[2][3][4] இது ஒற்றுமையின் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் இமயமலையில் இருந்து இந்தியாவின் சமவெளியை நோக்கி இடம்பெயரத் தொடங்கும் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி, நாட்டுப்புற நாடகம் மற்றும் பாடல்களை உள்ளடக்கிய இத்திருவிழா, சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பைக் கொண்டாடுகிறது மேலும் புராணங்களில் விவரிக்கப்பட்ட சாமா என்றழைக்கப்படும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.

புராண முக்கியத்துவம்

[தொகு]

கிருஷ்ணனின் மகள் சாமா என்பவற்றின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தவறு செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அவளை, அவளது தந்தை ஒரு பறவையாக உருமாற்றி தண்டித்தார், ஆனால் அவளுடைய சகோதரன் சாகேவாவின் அன்பும் தியாகமும் மீண்டும் அவளை மனித வடிவத்தை பெற அனுமதித்தது.[5]

கொண்டாட்டம்

[தொகு]

கார்த்திகை மாதம் 7ஆம் நாள் நடைபெறும் சத் பூஜையிலிருந்து இந்த திருவிழாவின் கொண்டாட்டம் தொடங்குகிறது. திருமணமாகாத இளம் பெண்கள், சாமா மற்றும் சாகேவாவின் சிறிய சிலைகள், மெழுகுவர்த்திகள், கோஹ்ல், களிமண் போன்ற தினசரி உபயோகப்படுத்தும் பொருட்கள் அடங்கிய கூடையுடன் கூடிவருகின்றனர்.[6]

அவர்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடிக்கொண்டே நடனமிடுவார்கள். ஊர் மத்தியில் கோலமிடுவது, ஒருவருக்கொருவர் கூடைகளை பரிமாறிக்கொள்வது போன்ற சில சடங்குகளைச் செய்கிறார்கள். இந்த கொண்டாட்டம் கார்த்திகை பூர்ணிமா வரை தொடர்ந்து நடைபெறும். கார்த்திகை பூர்ணிமாவின் மங்களகரமான நேரத்தில், பெண்கள் ஆற்றில் புனித நீராடுகிறார்கள் மற்றும் சாமா  மற்றும் சாகேவாவின்  சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுகின்றன.[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "पर्यावरण रक्षा का संदेश देता सामा चकवा". Dainik Jagran (in இந்தி). Retrieved 2022-10-09.
  2. "यस्तो छ सामा-चकेवा पर्वको पौराणिक कथा र महत्व". Online Khabar (in நேபாளி). Retrieved 2022-06-21.
  3. "About Motihari, Introduction of Motihari, Facts About Motihari". motihari.biharonline.in. Retrieved 2022-10-08.
  4. "बेतिया: भाई-बहन के अटूट प्रेम का प्रतीक सामा-चकेवा पर्व का समापन". ETV Bharat News. Retrieved 2022-10-09.
  5. "Sama-Chakeva festival begins from Friday". The Himalayan Times. 2018-11-08. Retrieved 2022-06-21.
  6. "Sama Chakeva festival begins in Mithilanchal". English.MakaluKhabar.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-21.
  7. Bishnu K Jha, (22 November 2012). "Mithila's submerged in Sama-Chakeva celebrations". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Retrieved 8 November 2017.
  8. Sunita Pant Bansal (2005). Encyclopaedia of India, pp. 71-72. Smriti Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8187967714
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமா_சாகேவா&oldid=3742850" இலிருந்து மீள்விக்கப்பட்டது