உள்ளடக்கத்துக்குச் செல்

சாமர்த்திய கதவு அழைப்பு மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமர்த்திய கதவு அழைப்பு மணி (Ring Video Door Bell Brand)

சாமர்த்திய கதவு அழைப்பு மணி (Smart DoorBell / Smart Video DoorBell) என்பது வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் ஒரு மின்னணு கதவு அழைப்பு மணி சாதனமாகும். இது வழக்கமான அழைப்பு மணி போல ஒலி எழுப்புவதோடு மட்டுமல்லாமல், கதவின் முன் நின்றுள்ள நபர்களுடன் காணவும் பேசவும் உதவுகிறது[1] . இந்த சாதனத்தில் சிறிய இருமப் படமி (காணொளி கேமரா), ஒலிவாங்கி (மைக்ரோஃபோன்) மற்றும் இணைய இணைப்பு அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. யாராவது சாமர்த்திய அழைப்பு மணியை அழுத்தும் நேரத்தில் அல்லது கதவின் முன் இயக்கம் கண்டறியப்பட்டால், படமி தானாகச் செயல்பட்டு நபரின் படம் அல்லது காணொளியை பதிவு செய்கிறது மற்றும் வீட்டின் உரிமையாளருடன் காணவும் பேசவும் உதவுகிறது. இந்த சாமர்த்திய கதவு மணி மூலம் வீட்டு உரிமையாளர் ஒரு கைபேசி செயலி வழியாக உள்ளமைக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட அகச்சிவப்பு ஒளிப்படக்கருவி (high-definition infrared camera) மற்றும் ஒலிவாங்கி (microphone) உதவியுடன், வருகையாளருடன் காணவும் பேசவும் முடியும். இவற்றை மின்கலன் (battery) மூலமாகவோ அல்லது மின் கம்பிகள் (24v ac) மூலமாகவோ இயக்க முடியும்.

சில சாமர்த்திய கதவு மணிகள், வீட்டின் சாமர்த்திய பூட்டைப் (Smart Door Lock) பயன்படுத்தி பயனாளர் தொலைவில் இருந்தே வீட்டின் கதவைத் திறக்கவும் அனுமதிக்கின்றன.

இவை பெரும்பாலும் வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன. சில இரவு நேரத்தில் காண உதவும் இருள் காட்சி தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளன. சிலவற்றில் இயக்கம் கண்டறியும் சென்சார் மற்றும் முக அடையாளம் காணும் அம்சங்களும் உள்ளன. பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மேக சேமிப்பகத்தில் அல்லது நினைவக அட்டையில் (SD Card) சேமிக்கப்படலாம்.

பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தாலும், சாமர்த்திய கதவு அழைப்பு மணி மூலம் குழந்தைகள் வீட்டிற்கு வந்த நேரத்தை காண முடியும். அவர்கள் கதவு அழைப்பு மணி அழுத்தும் போது, படமி அவர்களின் முகத்தை பதிவு செய்து, செல்லிடத் தொலைபேசி செயலிக்கு அறிவிப்பு அனுப்பும். இதனால் பெற்றோர் குழந்தைகள் பாதுகாப்பாக வந்தார்களா என்பதை உடனே தெரிந்து கொள்ள முடியும். தபால் ஊழியர் அல்லது பொருள் வழங்கும் நபர் வீட்டிற்கு வந்தால், அவர் அழைப்பு மணி அழுத்தும் போது காணொலி பதிவு செய்யப்படும். இதன் மூலம் பார்சல் எப்போது வந்தது என்பதையும், அதை யார் கொண்டு வந்தனர் என்பதையும் காண முடியும்.

இரட்டை படமி அழைப்பு மணி

[தொகு]

இரட்டை படமி ( கேமரா ) கொண்ட சாமர்த்திய கதவு அழைப்பு மணி (Dual Camera Video Doorbell) ஒரு வீட்டில் பொருள் (parcel) வந்ததைக் கண்டறிய மிகவும் எளிதாக உதவுகிறது.

இந்த சாதனத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன — ஒன்று நேராக முன்புறத்தைக் காணும், இன்னொன்று கீழே தரையை நோக்கி காணும். இதனால், கதவின் முன் நின்றிருக்கும் நபரின் முகத்தையும், தரையில் வைக்கப்பட்டிருக்கும் பொருளையும் ஒரே நேரத்தில் காண முடியும்.

பொருள் வழங்கும் நபர் (delivery person) கதவின் முன் வந்ததும், சாதனம் உடனே இயக்கமடைந்து (motion detection) வீடியோ பதிவு செய்து, மொபைல் செயலியில் அறிவிப்பு அனுப்பும். கீழ் கேமரா பொருளை தெளிவாகக் காண்பதால், யாராவது பொருளை வைத்துச் சென்றார்களா அல்லது யாராவது அதை எடுத்துச் சென்றார்களா என்பதை எளிதில் அறிய முடியும். இதனால், வீட்டில் இல்லாத நேரத்திலும் பொருள் பாதுகாப்பாக வந்ததா என்பதைப் பார்க்க முடிகிறது.

சாமர்த்திய கதவு அழைப்பு மணி (Google Nest Video Door Bell Brand)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சாமர்த்திய கதவு அழைப்பு மணி - Video door bell buying guide". Archived from the original on 2021-08-28. Retrieved 2022-05-21.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)