சாமராயபட்டி
சாமராயபட்டி திருப்பூர் மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள மடத்துக்குளம் வட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த வயல் வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.
முதன்மைத் தொழில்கள்[தொகு]
இங்கு உள்ள மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக. உள்ளது. நெல், கரும்பு, வாழை மற்றும் தென்னை போன்றவை பிரதானமாக இருக்கிறது.
அமைவிடம்[தொகு]
இவ்வூர் மடத்துக்குளத்தில் இருந்து தெற்கே 8 கி.மீ தொலைவிலும் உடுமலையில் இருந்து கிழக்கே 12 கி.மீ தொலைவிலும் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து மேற்கே 24 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.புவியியல் ரீதியான அமைவிடம் 10°30'0" வடக்கு 77°19'52" கிழக்கு ஆக உள்ளது.[1]
தபால் நிலையம்[தொகு]
சாமராயபட்டியில் ஒரு துணை தபால் நிலையம் உள்ளது . இதன் குறியீடு எண் 642204 ஆகும்.[2]
அருகிலுள்ள வழிபட்டுத் தலங்கள்[தொகு]
திருமூர்த்தி அணை , அமராவதி அணை , அமணலிங்கெசுவரர் ஆலயம் , தாண்டேசுவரர் ஆலயம் , காசி விசுவநாதர் ஆலயம் ,பழனி முருகன் கோவில் போன்ற புகழ் மிக்க வழிபாட்டு மற்றும் சுற்றுலாத் தலங்கள் இவ்வூரின் அருகில் உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Samarayapatti". wikimapia. http://wikimapia.org/12552163/Samarayapatty. பார்த்த நாள்: 5 சூலை 2017.
- ↑ "தபால் நிலையக் குறியீட்டு எண்". India Mapia. http://www.indiamapia.com/Coimbatore/samarayapatti.html. பார்த்த நாள்: 5 சூலை 2017.