சாமன் லால் சாமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாமன் லால் சாமன் (ஆங்கிலம்:Chaman Lal Chaman ) என்பவர் லண்டனைச் சேர்ந்த பிரபல பஞ்சாபி கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் வானொலி ஒலிபரப்பாளரும் ஆவார்.[1][2] 1979 ஆம் ஆண்டில் ஜக்ஜீத் சிங் பாடிய சௌன் தா மகினா என்ற பிரபலமான பஞ்சாபி பாடலை எழுதியுள்ளார்.[3] அவர் உருது மற்றும் இந்தி மொழியிலும் எழுதுகிறார்.

அவர் குரிந்தர் சாதாவின் பிரைட் அன்ட் பிரீஜுடிசு என்றத் திரைப்படத்திற்காக ஒரு பங்க்ரா பாடலை எழுதியுள்ளார். திரைப்படத்தில் அனு மாலிக் இசையமைத்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஜக்ஜித் சிங் மற்றும் அவரது மனைவி சித்ரா சிங் ஆகியோர் பல பாடல்கள் மற்றும் கசல்கள் இயற்றியுள்ளனர். இவரது பாடல்களை பிரபல இந்திய பாடகர்களான ஆஷா போஸ்லே, குமார் சானு மற்றும் சோனு நிகாம் ஆகியோரும் பாடியுள்ளனர்.

கென்யா மற்றும் பிரித்தனில் வானொலி தொகுப்பாளராக பணியாற்றிய அவர், சுனில் தத், ஜவகர்லால் நேரு மற்றும் நௌசாத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார்.

2010 இல் இவர் ஊடகங்கள், கலை மற்றும் கலாச்சாரத்தில் செய்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டார். இதற்காக லண்டனில் இவருக்கு ஆசிய சாதனையாளர் தங்க விருது வழங்கப்பட்டது.[3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் படைப்புகள்[தொகு]

சாமன் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்திலுள்ள பாஸ்லா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.[1] அவர் ஒரு குழந்தையாக இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்டார். அவரது தந்தை அவரை கென்யாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இவர் 1950 கள் மற்றும் 1960 களில் நைரோபியில் கென்ய வானொலியான தி வாய்ஸ் ஆஃப் கென்யாவின் தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். குறிப்பிடத்தக்க பாலிவுட் நடிகர் சுனில் தத் கென்யாவுக்கு வருகை புரிந்தபோது அவர வானொலிக்காக பேட்டி கண்டுள்ளாஅர்

பின்னர், 1956 முதல் 1974 வரை கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கென்யாவிலேயே கழித்தார்.[3] பின்னர், அவர் பிரித்தனுக்குச் சென்று பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) மற்றும் இங்கிலாந்தின் பஞ்சாப் வானொலியின் ஆசியப் பிரிவில் பணியாற்றினார்.

அவர் லண்டனில் கீத்மாலா என்ற முதல் இந்திய வணிக வானொலி நிகழ்ச்சியைத் தொடங்கினார். இது ஆசிய புலம்பெயர்ந்தோரிடையே ஆத்திரமடைய வைத்தது. 1990 களில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(பிபிசி) தொலைக்காட்சி ஒன்று மற்றும் பிபிசி வானொலி நான்கு ஆகியவற்றில் வாராந்திர நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.[1]

இலக்கியப் படைப்புகள்[தொகு]

தனது 13 ஆவது வயதில், குரு நானக் தேவின் பிறந்த நாளில் ஒரு கவிதை எழுதினார் . அதற்காக அவருக்கு ஒரு ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது. இது அவருக்குள் இருந்த கவிஞரைத் தூண்டியது. அதன் பிறகு அவர் பல கவிதைகளை எழுதினார். தனது கவிதைகளின் மூன்று தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் 50 வது ஆண்டுவிழா மற்றும் பாக்கித்தானின் சுதந்திரத்தின் போது, பிரபல பஞ்சாபி எழுத்தாளர் பல்வந்த் கார்கி இயக்கிய சரே ஜஹான் சே ஆச்சா என்ற நாடகத்தை எழுதினார். இதற்கு கசல் பாடகர் ஜக்ஜித் சிங் இசையமைத்தார்.[3] 1997 மற்றும் 98 ஆம் ஆண்டுகளில் லண்டன் மற்றும் பிரித்தனின் பிற நகரங்களில் அரங்கேறியபோது இது ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "'Poetry and lyrics are my first love'". DNAIndia.com. 30 July 2008. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.
  2. "Chaman Lal Chaman talks about his life". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 "Chaman blooms in Britain". AsianAffairs.in. January 2010. Archived from the original on 17 February 2013. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமன்_லால்_சாமன்&oldid=3792248" இலிருந்து மீள்விக்கப்பட்டது