உள்ளடக்கத்துக்குச் செல்

சாமன் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமன் மாவட்டம்
ضلع چمن
மாவட்டம்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நட்புறவு வாசல்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நட்புறவு வாசல்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சாமன் மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சாமன் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
கோட்டம்குவெட்டா கோட்டம்
நிறுவியது2021
தொகுதிசாமன்
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்)
பரப்பளவு
 • மாவட்டம்1,341 km2 (518 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 • மாவட்டம்4,66,218
 • அடர்த்தி350/km2 (900/sq mi)
 • நகர்ப்புறம்
1,30,139 (27.91%)
 • நாட்டுப்புறம்
3,36,079 (72.09%)
எழுத்தறிவு %
 • எழுத்தறிவு
  • மொத்தம்
    (39.97%)
  • ஆண்
    (47.73%)
  • பெண்:
    (30.60%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்டங்கள்2

சாமன் மாவட்டம் (Chaman District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். பலுசிஸ்தானின் குவெட்டா கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சாமன் நகரம் ஆகும். சாமன் நகரமானது, பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்கிழக்கே 126 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 950.3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டம் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்புறத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 61,915 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை ஆகும் 466,218 . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 127.4 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 39.97% ஆகும்.[2][3]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 182,044 (39.05%) ஆக உள்ளனர்.[4]நகர்புறங்களில் 130,139 (27.91%) மக்கள் வாழ்கின்றனர்.[2] இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழியை 99.95% மக்கள் பேசுகின்றனர்.[5]இம்மாவட்டத்தில் 99.65% மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இந்து, கிறித்தவம் போன்ற சிறுபான்மைச் சமயங்களை 1,654 (0.35%) மக்கள் பின்பற்றுகின்றனர்[6].

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

துணை ஆணையாளர் தலைமையில் செயல்படும் சாமன் மாவட்டத்தின் இரண்டு வருவாய் வட்டஙக்ள் உதவி ஆணையாளர்களின் தலைமையில் செயல்படுகிறது.

வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[7]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[8]

ஒன்றியக் குழுக்கள்
சாமான் வட்டம் 22 130,139 5,915.41 51.36% ...
சாமன் நகர்புற வட்டம் 1,319 336,079 254.80 35.18% ...

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  2. 2.0 2.1 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics].
  3. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  4. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  7. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  8. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமன்_மாவட்டம்&oldid=4325374" இலிருந்து மீள்விக்கப்பட்டது