உள்ளடக்கத்துக்குச் செல்

சாப்மானைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாப்மானைட்டுChapmanite
மஞ்சள்-பச்சை மண் போன்ற பாரிய சாப்மனைட்டு
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுFe2Sb(SiO4)2(OH)
இனங்காணல்
நிறம்மஞ்சள், பச்சை, ஆலிவ் பச்சை
படிக இயல்புபாரிய மண் திரட்சி; மணிகள்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
பிளப்புஇல்லை
முறிவுசங்குருவம் முதல் தெளிவற்றத்கு வரை
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுஅலோகப் பண்பு, மங்கலான விடாப்பிடியது
கீற்றுவண்ணம்மஞ்சள் பச்சை
ஒப்படர்த்தி3.69-3.75
ஒளிவிலகல் எண்nα=1.850 nβ=1.950 nγ=1.960
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை

சாப்மானைட்டு (Chapmanite) என்பது Fe2Sb(SiO4)2(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நெசோசிலிகேட் குழுவைச் சேர்ந்த ஒர் அரிய சிலிக்கேட்டு கனிமமான இது 1924 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. டொராண்டோ பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியராக பணியாற்றி மறைந்த எட்வர்ட் இயான் சாப்மான் (1821–1904) நினைவாக சாப்மானைட்டு எனப் பெயரிடப்பட்டது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாப்மனைட்டு கனிமத்தை Cpm[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

வேதியியல் ரீதியாக, இக்கனிமம் ஓர் இரும்பு ஆண்டிமனி சிலிகேட்டு ஆகும். பிசுமத்தோபெரைட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் உள்ளது. அலுமினிய அசுத்தங்களைக் கொண்டிருக்க்கும். வெள்ளிச் சுரங்கங்களுடன் நெருக்கமாக தொடர்புடையதாக குறிப்பாக கனடாவின் ஒண்டாரியோவில் உள்ள கீலி சுரங்கம், நெய்சில் கிராஃபைட்டு கொண்ட குவார்ட்சு நரம்புகளில் காணப்படுகிறது. தூள் போன்ற, மஞ்சள்-பச்சை, அரை ஒளி ஊடுருவக்கூடிய திடப்பொருளின் வடிவத்தை எடுத்து, அதே நிறத்தில் ஒரு கோடுகளை விட்டுச்செல்கிறது. ஆரம்பகால செருமன் நூல்கள் இந்த கனிமத்தை ஆண்டிமோன்-ஐப்போகுளோரைட்டு என்று குறிப்பிட்டுள்ளன.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் புசுவெல்ட்டு தொடர் பாறைகளில் கைவிடப்பட்ட அர்ச்செண்ட்டு ஈய சுரங்கத்தில் தெற்கு அரைக்கோளத்தில் சாப்மானைட்டு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்மானைட்டு&oldid=4252927" இலிருந்து மீள்விக்கப்பட்டது