சாபுர்சி சக்லத்வாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாபுர்சி சக்லத்வாலா
Shapurji Saklatvala.jpg
பிறப்பு28 மார்ச் 1874
இறப்பு16 சனவரி 1936 (அகவை 61)
கல்லறைBrookwood Cemetery
பணிஅரசியல்வாதி

சாபுர்சி சக்லத்வாலா (Shapurji Saklatwala 28,மார்ச்சு 1874-16, சனவரி 1936) இந்தியாவைச் சேர்ந்த பிரிட்டிசு அரசியல்வாதி மற்றும் பொதுவுடைமைவாதி ஆவார். இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1]

பிறப்பு[தொகு]

இந்தியாவில் பார்சி இனத்தைச் சேர்ந்த சக்லத்வாலா மும்பையில் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். ஜே ஆர் டாட்டாவுக்கு இவர் உறவினர் ஆவார்.[2] 1905 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் சக்லத்வாலாவை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது.

அரசியல் பணிகள்[தொகு]

  • 1909 இல் இங்கிலாந்து மாஞ்செஸ்டரில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் சேந்தார்.
  • முதல் உலகப் போருக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
  • 1917 இல் நடந்த சோவியத்துப் புரட்சி இவரை மாற்றியது. இங்கிலாந்து பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார்.
  • 1921 இல் பாரிசில் நடந்த ஆப்பிரிக்க காங்கிரசு மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • 1926 இல் மே நாள் கொண்டாட்டத்தின் போது லண்டன் பூங்கா ஒன்றில்
  • உரையாற்றினார். அதனால் இவர் கைது செய்யப்பட்டு 2 மாதம் சிறையில் இருந்தார்.
  • 1934 இல் சோவியத்து நாட்டுக்குப் பயணம் செய்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு நலம் அடைந்தார்.

நினைவுச் சின்னம்[தொகு]

இவர் நினைவைப் போற்றும் வகையில் இங்கிலாந்து பொதுவுடைமைக் கட்சி லண்டன் சவுத்தாலில் ஒரு இடத்துக்கு சக்லத்வாலா கூடம் என்று பெயர் சூட்டியுள்ளது.

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபுர்சி_சக்லத்வாலா&oldid=3480532" இருந்து மீள்விக்கப்பட்டது