சான் ரூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சான் ரூ (Jean Roux; மார்ச் 1876, ஜெனீவா – 1 திசம்பர் 1939) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன அறிவியல் அறிஞர் ஆவார்.

ரூக்சு ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1899-ல் தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இவரது ஆரம்பக்கால ஆராய்ச்சியில் முத்தவிலங்குகள் பற்றியதாகும். மேலும் பெர்லினில் முனைவர் பட்ட பிந்தையப் பணியைத் தொடர்ந்து இவர் பேசெலில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். இங்கு, இவர் பேசெலில் இவருக்கு முன்னோடியான பிரிட்சு முல்லரால் சேகரிக்கப்பட்ட நீர்நில வாழ்வன மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்தார்.[1]

1907-08-ல், ஹ்யூகோ மெர்டனுடன், இவர் அரு மற்றும் கீ தீவுகளில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்டார். மேலும் 1911-12-ல், பிரிட்சு சரசினுடன், இவர் நியூ கலிடோனியா மற்றும் லாயல்டி தீவுகளுக்குச் சென்றார்.[1] பிந்தைய பயணத்தின் விளைவாக, இவர் சரசினுடன் நோவா கலிடோனியா என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டார். போர்சுங்கன் இன் நியூ-கலேடோனியன் அண்ட் ஆஃப் டென் லாயல்டி-இன்செல்ன். நோவெல்லே-கலேடோனி மற்றும் ஆக்ஸ் ஐல்ஸ் லாயல்டி பற்றிய அறிவியல் ஆய்வுகள். இவரது தொழில் வாழ்க்கையில், நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன குறித்து 35 கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1]

பெயரிடல்[தொகு]

1913-ல் சான் ரூ, ரூ எமோ அரணை (எமோயா லாயல்டினென்சு) மற்றும் "ரூ பெரும் பல்லி" (ராகோடேக்டைலசு சாராசினொரம்) ஆகியவற்றை விவரித்தார். இவரது பெயரானது, அரணை, லிபினியா ரூசி (ஹெடிகர், 1934)[2] மற்றும் பிரினோபாட்ராசசு ரூசி தவளைச் சிற்றினத்திற்கும் இடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_ரூ&oldid=3445393" இலிருந்து மீள்விக்கப்பட்டது