சான்டி தீவு (நியூ கலிடோனியா)

ஆள்கூறுகள்: 19°13′30″S 159°55′30″E / 19.225°S 159.925°E / -19.225; 159.925
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்டி தீவு உள்ளதாகக் கருதப்படும் அமைவிடத்தின் நிலவுருவப் படம்

சான்டி தீவு (Sandy Island) எனப்படுவது ஆஸ்திரேலியாவிற்கும் நியூ கலிடோனியாவிற்கும் இடையில் பசிபிக் பெருங்கடலின் பவளக் கடல் பகுதியில்[1] உள்ளதாகக் கருதப்படும் ஒரு கற்பனைத் தீவாகும். இந்தத் தீவு பிரபல உலக வலைப்படங்களான கூகிள் மேப்ஸ் போன்றவற்றில் இடம்பிடித்துள்ளது[2].

இந்தத் தீவு இவ்விடத்தில் இல்லை என்று 2000ம் ஆண்டளவில் ஒரு தனிப்பட்ட நபர் அறிவித்திருந்தாலும் அந்தக் காலத்தில் இந்தச் செய்தி பிரபலமாகவில்லை[3][4]. ஆயினும் 2012ம் ஆண்டு கடல் ஆராய்ச்சிக்குச் சென்ற அவுஸ்திரேலியக் குழுவினர் பல்வேறு வரைபடங்களில் இருக்கும் வேறுபாட்டை அறிந்து இந்தத் தீவை நேரில் சென்று பார்க்க முடிவெடுத்தனர். அதன்படி அங்கு சென்று பார்த்தபோது அவ்விடத்தில் அந்த தீவு இருக்கவில்லை. தீவு இருந்ததாகக் குறிப்பிட்ட இடத்தில் சுமார் 1400 அடிக்கு கடல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது[5].

உசாத்துணை[தொகு]

  1. "Sandy Island". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Scientists un-discover Pacific island". ரிவி3 (நியூசிலாந்து). 23 நவம்பர் 2012 இம் மூலத்தில் இருந்து 11 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131211155941/http://www.3news.co.nz/Scientists-un-discover-Pacific-island/tabid/417/articleID/277808/Default.aspx. பார்த்த நாள்: 23 November 2012. 
  3. "Sandy 'Marie Celeste' Island undiscovered - again: Radio hams beat science by a decade". த ரெஜிஸ்டர். 22 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2012.
  4. "TXØDX challenges National Geographic (Bulletin 16)". TXØDX. 10 ஏப்ரல் 2000. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. Sandy Island In South Pacific 'Does Not Exist'

வெளி இணைப்புகள்[தொகு]