சான்சிலேடு மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சான்சிலோடு மனிதனின் மண்டையோடு

சான்சிலேடு மனிதன் பழங்காலத்தில் வாழ்ந்த மனித வகையினன். இவ்வகையினர் வாழ்ந்த காலம் ஏறக்குறைய 17000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கருதப்படுகிறது. இவ்வகை மனிதர்களின் புதை படிவங்கள் பிரான்சு நாட்டில் சான்சிலேடு (chanceladu) என்னுமிடத்தில் கி.பி.1888 இல் கண்டெடுக்கப்பட்டன.[1] அதனாலேயே இம்மனித வகையினர் “சான்சிலேடு மனிதன்” ( chanceladu man ) எனக் கூறப்பட்டனர். இந்த புதைப்படிவ எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்த டாக்டர் தெசுதூத்து (Testut ) இவர்களின் புதைப் படிமங்களை கண்டெடுத்த போது அவை புதிய இன மனிதர்களின் எனக் எலும்புக்கூடுகள்குறிப்பிட்டனர் . இந்த புதைப்படிமங்கள் பெரிகு (perigueux) அருங்காட்சியகத்தில் உள்ளன. சான்சிலேடு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் இடக்கை தலையின்கீழ் வைக்கப்பட்டிருந்தது. வலக்கை, கீழ் தாடைகளின் கீழ் வைக்கப்படிருந்தது. கால்கள் மடக்கப்பட்டு, முட்டிகள் கீழ் தாடையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அவை தாழியில் அடைக்கப்பட்ட பெருவிய உருவங்களை (Peruvian mummies) ஒத்திருந்தன. சன்சிலேடு மனிதர்கள் இறந்தவர்களை விலங்குகளின் தோலினாலான பையில் மேற்குறிப்பிட்ட நிலையில் வைத்து புதைத்திருக்கலாம் என [தெசுதுத்து] கருதுகிறார். சந்சிலேட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு ஏறக்குறைய 55 முதல் 65 வயதுக்குள் உள்ள மனிதனுடையது என்று தெரிகிறது.அம்மனிதனுடைய உயரம் ஏறக்குறைய 4 அடி 11 அங்குலம் என்று டாக்டர் தெசுதூது மதிப்பிட்டார். பிறகு அது தவறென்று கருதிச் சன்சிலேடு மனிதன் 5 அடி 1 அங்குலம் இருக்கலாமென மதிப்பிடப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chancelade skeleton". Encylopædia Britannica. பார்த்த நாள் 18 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்சிலேடு_மனிதன்&oldid=2317028" இருந்து மீள்விக்கப்பட்டது